THF Announcement: E-books update: 13/06/2015 *திருமயிலைத் தலபுராணம்*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு சிறிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  திருமயிலைத் தலபுராணம்
வெளியிடுவோர்: சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ பகாலீசுவரர் தேவஸ்தான வெளியீடு

வெளிவந்த ஆண்டு: 1948


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 422

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update: 7/06/2015 *வேளாளர் சரித்திரம்

5 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:  வேளாளர் சரித்திரம் 2ம் பதிப்பு. *ஏறக்குறைய 1927ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்திருக்கலாம்


நூலைப் பற்றி..
முதல் நூல் 1923ம் ஆண்டில் 500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டவை அனைத்தும் தீர்ந்தமையால் 2ம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
மக்கள் மனதில் பலவாறாக திணிக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளைப் பற்றி சிந்திக்க வைப்பதும் சரியான இலக்கை நோக்கி சிந்திக்க வைப்பதும் இந்த நூலின் நோக்கம் என மறைமலை அடிகள் இந்த நூலின் முன்னுரையில் ஆங்கிலத்தில் பதிகின்றார். இதில் கையெழுத்துப் பகுதியில் இவரது வேதாச்சலம் என்ற இயற்பெயர் வழங்கப்பட்டுள்ளது. 
அயல்னாட்டினர் சமஸ்கிருதத்தை படித்து ஆய்வு செய்த அளவில் பாதியாவது தமிழை ஆய்வு  செய்திருந்தால் அவர்களது ஆய்வுகளின் பலன் தமிழ் வரலாற்றிற்கு மிகுந்த பலனை அளித்திருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.

நூலின் பொருளடக்கத்தில் சில 

  • வேளாளர் வாழ்க்கை
  • ஆரிய நாற்சாதியில் வேளாளர் அடங்காமை
  • ஆரியர் வேளாளரைத் தாழ்த்தச் செய்த சூழ்ச்சி
  • ஆரியப் பார்ப்பனர் தமிழையுஞ் சிவத்தையும் இகழ்தல்
  • வேளாளர் ஆரியத்தையும் பார்ப்பனரையுங் கொண்டாடல்
  • தொல்காப்பியரும் வேளாளரும்
  • வடனாட்டிற் குடியேறிய வேளாளர்
  • இந்தியாவின் வடமேற்கில் குடிபுகுந்த ஆரியரின் புலையொழுக்கம்
  • வேளாளார் ஆரியரை அருவருத்து ஆரியத்தில் அறிவுனூல்கள் இயற்றினமை
  • மாயாவாதி ஒருவர் உருத்திரவழிபாடு தமிழரதன்று என்றமை பொருந்தாமை
  • நடுனிலையுடைய ஐரோப்பிய ஆசிரியர் உருத்திர வழிபாடு தமிழரதென்றமை
  • உருத்திரனிலுஞ் சிறந்த சிவத்தைத் தமிழர் மறைத்து வைத்தமை
  • தமிழர்கள் உபனிடதம் சாங்கியம் முதலிய அறிவுரை நூல்கள் வகுத்தமை
....



தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 420

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.
மின்னாக்கம்:சுபாஷிணி 
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update: 31/05/2015 *ஸ்ரீ தில்லையம்மன் வரலாறு*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  ஸ்ரீ தில்லையம்மன் வரலாறு
எழுதியவர்: புலவர்.து.சோ நடராசன், சிதம்பரம்
வெளியிடுவோர்: சிதம்பரம் தில்லையம்மன் கோயில் குடமுழுக்கு விழாக் குழுவினர்.

நூலைப் பற்றி..
சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராசப்பெருமான் கோயில் போல தில்லையம்மன் கோயிலும் தலபுராணம் கொண்ட ஒரு வழிபடுதலம். பழமையான வரலாற்றைக் கொண்ட இக்கோயில் மீண்டும் 13ம் நூற்றாண்டில், கி.பி.1229 முதல் 1275 வரை சோழனாட்டின் வடபகுதியை கைப்பற்றி ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது. 

இப்படி மேலும் பல வரலாற்றுத் தகவல்களையும் புராணத் தகவல்களையும் விளக்கும் சிறு நூல் இது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 419

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


மண்ணின் குரல்: மே 2015: வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயங்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், இருபது கால் மண்டபம், கலசார்ச்சன மண்டபம், கோபுரம், மானஸ்தம்பம், மடப்பள்ளி ஆகிய பகுதிகளைக் கொண்டு  கோயில் விளங்குகின்றது. இதன் நடுவே ஆதிநாதர் பரியங்காசனத்தில் அமர்ந்த கோலத்தில் வழிபாட்டில் உள்ளார். மூலவர் திருவுருவம் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்போது இருக்கும் கோயில் 12, 13ம் நூற்றாண்டு கட்டிடத்தின் புணரமைக்கப்பட்ட பகுதி.

கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியில் பழமையான ஆதிநாதர், தர்மதேவி, பத்மாவதி, பிரம்ம சாஸ்தா கற்சிலைகள் இருக்கின்றன. 

இக்கோயில் இன்றும் வழிபாட்டில் இருப்பது. மக்கள் குடியிருப்புப் பகுதியிலேயே கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் ரிஷப தீர்த்தங்கரர், பார்ச்சுவதீர்த்தங்கரர், சர்வாணயக்‌ஷர் ஆகிய மூன்று சிலைகளையும் விழாக்காலங்களில் வீதி உலா எழுந்தருளச் செய்வர்.

இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, டாக்டர்.பத்மாவதி ஆகியோர்க்கு என் நன்றி.

7 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/05/blog-post_30.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=_iyEeRIbZQo

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: E-books update: 24/05/2015 *செண்டலங்காரன் - விறலி விடு தூது*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:  செண்டலங்காரன் - விறலி விடு தூது
பதிப்பாசிரியர்: புலவர் திரு.கோவிந்தராசனார்.
பதிப்பாளர்: தஞ்சாவூர் சரபோஜியின் சரஸ்வதி மகால் நூல் நிலையம்

நூலைப் பற்றி..
தூது இலக்கியம் தமிழ் மொழிக்குரிய பலவகைப் பிரபந்தகளுள் ஒன்றாகும். புலவர் தாம் விரும்பும் தெய்வங்களிடத்தும் வள்ளல்களிடத்தும் பாணன், விறலி போன்றாருடனும் கிளி, வண்டு, தென்றல் போன்றவற்றையும் தூது விடும் பாங்கில் தூதாகும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

இத்தூது பாட்டுடைத் தலைவனாகிய செண்டலங்காரன் என்னும் வள்ளலைப் புகழும் வகையில் ஆடலில் சிறந்த விறலியைத்  தன்னிடம் ஊடல் கொண்ட மனையாளிடம் தூது விடும் பாங்கில் அமைக்கப்பட்ட நூல்.

நூலில் செண்டலங்காரன் என்ற வள்ளனின் கதையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வாகுபட்டர் கதையும் உள்ளது.

நூல் முழுதும் செய்யுள் நடையில் உள்ளது

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 418

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.
மின்னாக்கம்:சுபாஷிணி 
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​



மண்ணின் குரல்: மே 2015: லாடன் கோயில் குடைவரைக்கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 




இப்பதிவில் பொதுவாக ஒரு குடைவரைக்கோயில் என்பது எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பது  முதலில் விளக்கப்படுகின்றது. 
  • முதலில் எவ்வகை இடத்தில் குடைவரைக்கோயிலை அமைக்கவேண்டும் என தேர்ந்தெடுத்தல்.
  • உளியால் பாறையை தோண்டி எடுத்து விட்டு உள்ளே சிலை இருக்க வேண்டிய இடத்தையும் தூண்கள் இருக்க வேண்டிய இடத்தையும் விட்டு விட்டு ஏனைய பகுதிகளைச் செதுக்கி நீக்குதல்
  • வெளியில் ஒரு அர்த்த மண்டபம் அமைத்தல்
  • அர்த்த மண்டபத்தில் 2 முழுத்தூண்களையும் 2 அரைத்தூண்களையும் செதுக்குதல்
  • உள்ளே கருவரையில் மாடத்தில் புடைப்புச் சிற்பமாக தெய்வ வடிவம் அமைத்தல்
  • வெளிச்சுவற்றில் துவார பாலகர் சிற்பம் அல்லது வேறு சிலைகள் சின்னங்கள் செதுக்குதல்
இவற்றோடு குடைவரைக் கோயிலின் பொது அமைப்பு உருவாக்கப்படுகின்றது.

இப்பதிவில் தொடர்ந்து தமிழக நிலப்பரப்பில் முருக வழிபாடு பற்றியும் விளக்கமளிக்கப்படுகின்றது.

லாடன் கோயில் குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. 7, 8ம் நூற்றாண்டு குடைவரை இது. முருகனுக்கு மட்டுமென்று தனிப்பட்ட வகையில் இருக்கும் ஒரே குடைவரை கோயில் இது என்ற தனிச்சிறப்பும் பெறுவது. முருகனோடு தெய்வானை மட்டுமே இருக்கும் வகையில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
கருவரைக்கு வெளியே 2 துவார பாலகர்களும் மயிலும் சேவலும் இருக்கும் புடைப்புச் சிற்பமும் இருக்கின்றன.

தொல்லியல் அறிஞரும் தமிழ் அறிஞருமான காரைக்குடி டாக்டர்.வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் இப்பதிவில் அனைத்து செய்திகளையும் வழங்குகின்றார்கள்.



​டாக்டர்.வள்ளியுடன் டாக்டர்.ரவிச்சந்திரனும் திரு.நாகரத்தினமும்

இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன்மாதம் தமிழகத்தின் மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலை  பகுதியில் நான் பதிவாக்கினேன். 

11 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/05/blog-post_23.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=QDwouUE4aSw&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!



அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: E-books update: 17/05/2015 *மகனே உனக்கு*

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  மகனே உனக்கு
எழுதியவர்: வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர்: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்

நூலைப் பற்றி..
இரங்கூனில் நடைபெற்று வந்த ஜோதி என்ற மாதப்பத்திரிக்கையில் திரு.சாமிநாத சர்மா  வ.பார்த்தசாரதி என்ற புனைப்பெயரில் 1938ஆம் ஆண்டு தொடங்கி 1941 வரை இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் சில கடிதங்களை எழுதி வந்தார். அத்தோடு கூடுதலாக அப்பத்திரிக்கையில் வெளிவராத இரண்டு கடிதங்களையும் சேர்த்து இந்த நூல் உருவாக்கப்பட்டது. இதில் ஆசிரியரின் கவிதைகளும் இடம்பெறுகின்றன.

புனைப்பெயரில் எழுதிய கடிதங்களை ரசித்த தனது மகனுக்கு முகவுரையில் மிக அழகான அறிமுகப் பகுதியை எழுதியிருக்கின்றார். இதனை வாசித்து விட்டு நூலுக்குள் செல்வது நன்று.

இந்த நூலில்
  • கடமையை செய்
  • மன உறுதி
  • தன்னம்பிக்கை
  • ஓய்வு கொள்வது தேவையா?
  • சத்தியத்தைச் சொல்
  • உன் மனசாட்சியை விற்று விடாதே
  • சொல்லாதே - செய்
  • முயற்சியை கைவிடாதே
...
இப்படி எளிமையான அதேவேளை ஒரு மனிதருக்கு அடிப்படை சக்தி தரும் சொற்களில் தமது எண்ணங்களை கடிதமாக வடித்திருக்கின்றார் ஆசிரியர்.

ஒவ்வொரு இளைஞரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
கிரேக்க ரோமானிய பண்பாட்டின் உதாரணங்களையும் காட்டி கடிதங்கள் எழுதப்பட்டிருப்பது சிந்தனை விசாலத்தை விரிவாக்கிக் காட்டுகின்றது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 417

மின்னாக்கம், மின்னூலாக்கம்:  (சுந்தரராஜன் ஜெயராமன், கோயம்புத்தூர்)


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES