மண்ணின் குரல்: அக்டோபர் 2014: மலேசியத் தமிழர்களின் வாழ்வியல்: 20ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை - பகுதி 1

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கடந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தவர்கள் பலர் மலேசியாவின் பல மாநிலங்களில் தங்கி தங்களின் புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆயினும் பலர் இன்னமும் தமிழகத்துடன் தொடர்பு வைத்திருப்பதை நன்கு காண்கின்றோம். இத்தகைய விஷயங்களையும் பதிவு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழியப் பதிவு முயற்சிதான் இது.



இந்தியாவில் பெண் எடுத்து மலேசிய மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பர் இக்காலத்தில் ஆனால் 1960களிலும், 70களிலும் மலேசியாவிற்கு வந்த இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  சிலர் இந்தியாவிற்குப் பெண்ணை திருமணம் முடித்து அனுப்பி வைத்தனர்.

அப்படி ஒரு அனுபவத்தைக் கொண்டவர் தான் திருமதி.வசந்தா. இவர் இந்தியாவில் திருவாரூரில் பிறந்து மிக இளம் பிராயத்தில் மலேசிய பினாங்கு மானிலத்தில் வளர்ந்து அங்கே கல்வி கற்று பின்னர் பெற்றோர் விருப்பத்தின் பேரில் இந்தியாவில் தஞ்சையில் ஒரு கிராமத்து அதிகாரிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். அங்கிருந்த இவர் 25 ஆண்டுகள் இணைந்திருந்த அவ்வாழ்க்கையில் அவரது கணவர் மற்றொரு பெண்ணை மணம் முடிக்க விரும்பவும் அதற்கு உற்றார் உறவினர் சமாதானம் சொல்லி  இவரிடம் சம்மதம் பெறவும் முயற்சி செய்த போது மனம் வருந்தி  தனது 50வது வயதில் தஞ்சையிலிருந்து வெளியேறி பினாங்கிற்கு வந்து சேர்ந்தார்.

புது வாழ்க்கையை மீண்டும் தனது 50ம் வயதில் பினாங்கில் தொடங்கினார். இப்போது பினாங்கிலேயே உத்தியோகம் பார்த்துக் கொண்டு உறவினரோடு சேர்ந்திருந்து சமூகத்  தொண்டும் செய்து வருபவர் இவர். 64 வயது பெண்மணி. 

சென்ற ஆண்டு நான் கேரித் தீவிற்குச் சென்ற போது என்னுடன் எனது பேட்டியில் உதவுவதற்காக வந்தவரை அவர் கதையைச் சொல்லச் செய்து பேட்டி செய்தேன்.

இயல்பான பேச்சில் அமைந்தது இப்பதிவு. 
மக்கள் வாழ்க்கையும் சரித்திரம் தானே.   தனது அனுபவங்களைச் சொல்கின்றார். அதிலும் குறிப்பாக இந்த முதல் பதிவில் தனது இளம் பிராயத்து மலேசியாவில் பினாங்குத் தீவில் தனது பள்ளிக்கூட அனுபவங்களைச் சொல்கின்றார். இவை 1960களில் நடந்த விஷயங்கள். கேட்டுப் பாருங்கள்!​

விழியப் பதிவைக் காண:    http://video-thf.blogspot.de/2014/10/20-1.html

யூடியூபில் இப்பதிவைக் காண:     https://www.youtube.com/watch?v=nLj7-674LWI&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: ebooks update: 28/9/2014 *தமிழ்க் கோயில்கள் - தமிழர் பண்பாடு*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  தமிழ்க் கோயில்கள்  - தமிழர் பண்பாடு
ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
பதிப்பு: எஸ். ஆர்.சுப்பிரமணியப் பிள்ளை, திருநெல்வேலி




நூல் குறிப்பு:  
வானொலிப் பேச்சாக வந்தவற்றை கட்டுரை வடிவிலும் வழங்கியிருக்கின்றார் பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள்.

நூல் இரண்டு பகுதிகளாக  அமைந்துள்ளது. முதல் பகுதி தமிழ்க் கோயில்கள் என்ற தலைப்பில் 5 கட்டுரைகள் ஆகமங்கள், குடைவரை அமைப்பு, கோயில்கள், மாளிகைகள் சரித்திரச் சான்று என்ற விஷயங்களை முன் வைத்து அமைந்துள்ளன.

அடுத்த பகுதியாக அமைவது தமிழர் பண்பாடு பற்றிய விஷயங்கள். இதில் பாஸ்கரத் தொண்டைமான் அவர்களின் சிற்பத்தில் ஓவியத்தில் தமிழர் பண்பாடு என்ற கட்டுரையுடன், பி.ஸ்ரீ.ஆச்சார்யாவின் இலக்கியத்தில் தமிழர் பண்பாடு, கே.வாசுதேவ சாஸ்திரியின் இசையில் தமிழர் பண்பாடு, எஸ்.சிவகுமாரின் மடாலயங்களில் தமிழர் பண்பாடு, அ.ரா.இந்திராவின் தினசரி வாழ்வில் தமிழர் பண்பாடு என்ற 4 கட்டுரைகளும் இடம்பெறுகின்றன


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 397

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


Fwd: Tagore in Tamil - 48 verses

0 மறுமொழிகள்
Thanks to Sri subbaraman.
Aum V.Subramanian
---------- Forwarded message ----------
From: Subbaraman NV <nvsubbaraman@gmail.com>
Date: 2014-09-22 9:17 GMT+05:30
Subject: Tagore in Tamil - 48 verses
To: Subbaraman NV <nvsubbaraman@gmail.com>


​ஒரு சிறந்த முயற்சி. கவி ரவீந்திரர் அவர்களின் பாடல்களின் தமிழாக்கம்

--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

--



THF Announcement: ebooks update: 19/9/2014 *ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம்*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம்  *2ம் பதிப்பு
ஆசிரியர்: T.F. டௌட் LL.D. D.Litt இயற்றி ஸர் பிலிப் ஹார்ட்டாக் தொகுத்தது.



நூல் குறிப்பு:   1937ல் வெளிவந்த நூல் இது.

இந்த நூலில் கிபி 410 வரை ப்ரிட்டானியரும் ரோமானியர் ஆங்கிலேயர் ப்ரிட்டன் தேசத்திற்கு எப்படி வந்தனர் என்பது, ஆங்கிலேயர் கிறிஸ்துவர்களானது, 597-664 இங்கிலாந்து ஒரே ராஜ்ஜியமானது, ஆல்ப்ரெட் முதல் எட்வர்ட் பக்த சீலன் வரைக்கும், நார்மன் அரசர்கள், 2ம் ஹென்றியும் அவனுடைய  குமாரர்களும் ....
என மிக விரிவாக பிரித்தானிய வரலாற்றிச் சொல்கின்றது.


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 396

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: கேரித் தீவில் தமிழர் குடியேற்றம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது. 

1930ம் ஆண்டில் தமக்கு 1 வயதாக இருக்கும் போது ரஜூலா கப்பலில் மலாயா வந்தமை பற்றியும் அக்கால மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சுவாரஸியமாக பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் இத்தம்பதியினர். அவர்களோடு இவரது தம்பி மகள் காந்தியும் உடன் வருகின்றார்.

கப்பலில் சென்னையிலிருந்து பயணித்து பின்னர் நாகபட்டினம் வந்து அங்கும் மக்களை ஏற்றிக் கொண்டும் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டும் வரும் கப்பல் மலேசியாவின் பினாங்குக்கு வந்து ஆட்களையும் பொருட்களையும் இறக்கிய பின்னர் போர்ட் க்ளேங் துரைமுகத்தில் நிறுத்தி பயணத்தை முடித்துக் கொள்ளுமாம். 5 நாட்கள் பயணமாக கடலில் இந்தப் பயணம் இருந்திருக்கின்றது. 

ரஜுலா கப்பல்

கல்வி பெறுவது என்பதை விட தோட்டத்தில் காடுகளை அழிக்கும் தொழில் செய்வதும் பின்னர் செம்பனைகளை நட்டு அங்கு பணி புரிவதுமே கனவாக அக்காலத்தில் இங்கு வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்திருக்கின்றது. ஆயினும் கால மாற்றத்தில் இவர்களது குழந்தைகள் கல்வி கற்று உத்தியோகத்திற்குச் சென்று விட்ட நிலையில் இவர்களது வாழ்க்கை மலேசிய சூழலுடனேயே ஐக்கியப்பட்டு விட்டது. ஆயினும் தமிழகத்திற்கான இவர்களது தொடர்புகள் இன்னமும் உறுதியாகவே இருக்கின்றன.

இவர்களோடு தஞ்சாவூரைச் சேர்ந்த திருமதி வசந்தாவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களும் இவர்களது குடும்பத்தினர் அனைவருமே இந்தியாவிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு மலாயா வந்தவர்கள்.

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2014/09/blog-post_17.html

யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=AXXVvu26PLE&feature=youtu.be


இப்பதிவு ஏறக்குறைய 23நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் - 2

0 மறுமொழிகள்
வணக்கம்.

இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


இந்த இதழின் உள்ளடக்கம்:
  • பொதுச் சமாச்சாரங்கள்
  • ஔவையின் வாக்கு
  • இந்தியாவின் இராணுவச் செலவு
  • குலக்குறிப்பு
  • சங்க விஷயங்கள்
  • தியாக புத்தியுள்ள 42 வீரர்கள்
  • ஆசிரம வாசம்


அத்துடன் ..
அனுபோக கைத்தொழில் போதினி என்ற தலைபிலான கைத்தொழில் சாஸ்திரத்தை விளக்கும் நூல் பற்றிய விளம்பரமும் இந்த இதழில் உள்ளது.


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 13/9/2014 *தமிழ்க்கவி சரிதம்*

0 மறுமொழிகள்


வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  தமிழ்க்கவி சரிதம்  *2ம் பதிப்பு
ஆசிரியர்: ராவ் ஸாஹிப் மு. இராகவையங்கார், தலைமைப் பண்டிதர், யூனிவர்ஸிடி தமிழ் லெக்ஸிகன் ஆபீஸ்


நூல் குறிப்பு:   1937ல் வெளிவந்த நூலின் 1958ம் ஆண்டு இரண்டாம் பதிப்பு இது.

தமிழ்க்கவி சரிதம் எனும் இந்த நூல் சங்க கால புலவர்களான அகத்தியனார்,  பாண்டியனார், கபிலர் எனத் தொடங்கி ஒரு நீண்ட பட்டியலை வைத்து அதனை விளக்குவதாக அமைந்திருக்கும் ஒரு நூல். 


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 394

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES