மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2013 கோவிலூர் ஆதீனம் (2)

0 மறுமொழிகள்
வணக்கம்.

இப்பேட்டியின் அடுத்த பதிவு இன்று வெளியிடப்படுகின்றது. மடத்தின் தொடக்கம், மடாதிபதிகள், மடத்தின் செயல்பாடுகள் என்னும் வகயில் இந்தப் பதிவு அமைந்திருக்கின்றது. இது ஏறக்குறைய 20 நிமிடங்கள் வரும் ஒரு பதிவு.

இரண்டாம் பதிவு:இங்கே செல்க!

யூடியூபில் இதே பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=oS3z72NHsgU&feature=youtu.be

சில படங்கள்

கோவிலூர் மடத்தின் முன்புறப்பகுதியில் உள்ள தெப்பக்குளம்

கோவிலூர் மடம்

கோவிலூர் மடத்தின் அலுவலகத்தில் ஆதீனகர்த்தருடன்

யோகா பயிற்சி நிலையம், நூலகம்

நூலக அதிகாரிகளுடன் திரு.வினைதீர்த்தான், டாக்டர்.காளைராசன்

நல்ல தோட்டமும் ஆடுகளும் மாடுகளும் என மடத்தில்  இயற்கை காட்சி

கோயில் தெப்பக்குளம்

அன்புடன்
சுபா

மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2013 கோவிலூர் ஆதீனம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

காரைக்குடி நகரிலிருந்து 2கிமீ தூரத்தில் இருப்பது கோவிலூர் தமிழ் வேதாந்த மடம். 250 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டதொரு மடம் இது. இம்மடத்தைத் தொடங்கியவர் தவத்திரு ஸ்ரீ முத்துராமலிங்க ஞான தேசிகர்.

இவ்வருடம் மார்ச் மாதம் எனது தமிழகத்துக்கானப் பயணத்தின் போது ஒரு நாள் முழுமையாக இத்திருமடத்தில் இருக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது கட்டப்பட்ட பழம் சிவாலயம் அருள் தரும் திருநெல்லை அம்மனுட கூடிய அருள் மிகு கொற்றவாள் ஈசுவரர் கோயிலுடன் இணைந்ததாக இந்தத் திருமடம் அமைந்திருக்கின்றது.

கோயில், அதனைச் சார்ந்த மடம் என்பதோடு நின்று விடாமல் ஒரு ஆரம்ப நிலைப்பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி, இசை, வாத்தியக் கருவிகள் கல்லூரி யோகா ஆராய்ச்சி மையம் என விரிவாக மடத்தின் செயல்பாடுகள் அமைந்திருகின்றன. மடத்தின் ஒரு அங்கமாக செட்டிநாடு பாரம்பரிய வரலாறு சொல்லும் அருங்காட்சியகம் ஒன்றும் நூலகம் ஒன்றும் இணைந்திருப்பதும் இம்மடத்தின் தனிச்சிறப்பு.

கோவிலூர் மடத்திற்கு என்னுடன் திரு.வினைத்தீர்த்தான், டாக்டர் வள்ளி, டாக்டர் காளைராசன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். மடாதிபதியுடன் நீண்டதொரு பேட்டி ஒன்றினை விழியப் பதிவாகச் செய்திருந்தேன். அதன் முதற்பகுதியை இன்று வெளியிடுகின்றேன்.

இந்த முதல் பேட்டியில் மடம் தொடங்கப்பட்ட வரலாறு, மடாதிபதிகள் வரலாறு தொடர்பான தகவல்களைத் தருகின்றார் சுவாமிகள். சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் கடந்த 2 ஆண்டுகளாக மடத்தின் 13வது பட்டமாக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர். பூஜைகள் மட்டுமன்றி மடத்தின் அனைத்து நிர்வாகம், கல்லூரிகளின் நிர்வாகம் ஆகியவற்றைத் தாமே நேரில் கவனித்துக் கொள்கின்றார்.

முதல் பேட்டியின் பதிவைக் காண இங்கே செல்க!

யூடியூப் பதிவாக இங்கே காணலாம். http://www.youtube.com/watch?v=_AyS-caSqHE&feature=youtu.be

சில படங்கள்:

டாக்டர்.வள்ளி, சுபா, சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், திரு.வினைதீர்த்தான்

திரு.வினைதீர்த்தான், டாக்டர்.காளைராசன், சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 31/Aug/2013 *மநோஹர ராம சரிதம்*

1 மறுமொழிகள்

வணக்கம்.

இன்று மேலும் ஒரு பழம் நூல் ஒன்று மின்னாக்கம் செய்யப் பெற்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது.

நூலின் பெயர்: மநோஹர ராம சரிதம் (முதற்பதிப்பு)
பதிப்பித்தவர்: பி.எஸ்.ராமஸ்வாமி ஐயர்

நூல் எண்: 339

மின்னாக்கம் , மின்னூலாக்கம்: டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன்.

நூலை வாசிக்க

முதற்பாகம்
இரண்டாம் பாகம்

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன் - 1921 அக்டோபர் (3) மின்னூல்

0 மறுமொழிகள்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ்கள் மூன்று வெளிவந்திருக்கின்றன. அக்டோபர் மாதம் வெளிவந்த மூன்றாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • அமெரிக்காவைப் பற்றிய விவரங்கள்
  • மிஸ்டர் அசாரியா நாடார் லண்டனிலிருந்து எழுதுகிறார்
  • கடிதங்கள்
  • சங்க விஷயம்
  • நாடார் மஹாஜன சங்கப் பிரசாரம்
  • குல வர்த்தமானம்
  • சமயோசித நன்மொழி
  • இந்திய வீரர்கள்

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன் - 1921 அக்டோபர் (2) மின்னூல்

0 மறுமொழிகள்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ்கள் மூன்று வெளிவந்திருக்கின்றன. அக்டோபர் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • கலியுகமகிமை
  • கடிதங்கள்
  • நாடார் பாங்கு
  • கம்பர் யார்
  • செய்தித் திரட்டு
  • நாடார் மகாஜன சங்கமும் பிரசாரமும்
  • கோவில்களில் ஆதிதிராவிடர் பயம்

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன் - 1921 அக்டோபர் மின்னூல்

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம். இந்த இதழில் முந்தைய இதழ்களிலிருந்து மாற்றம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக இந்த இதழில் கடவுள் வணக்கம் இல்லை. அத்துடன் தலைப்புப் பகுதியில் அருப்புக் கோட்டை நாடார் கல்விப் பிரசங்க சபையினிலிருந்து வெளிவரும்.. என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு அரசியல் நிகழ்வுகள் பற்றி விரிவாக அலசப்படுகின்றன. மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • சோப்பு செய்யும் முறை
  • கலியுக மகிமை
  • மகாத்மா காந்தியின் தென்னிந்தியா சுற்றுப் பயணம்
  • மறுப்பு
  • கடிதங்கள்
  • திருவாங்கூரில் நாடார்கள்
  • நாடார் மகாஜன சங்கமும் பிரசாரமும்
  • கோட்டாறு மகாநாடு
  • நாடார் பங்கு லிமிடெட்

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 22/Aug/2013 *திருவிடைமருதூர்த்திரிபந்தாதி*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருவிடைமருதூர்த்திரிபந்தாதி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 336

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலய பிரகார வடிவம் - ஸ்ரீ மாசிலாமணியீசர்

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 21/Aug/2013 *திருக்குடந்தைத்திரிபந்தாதி*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருக்குடந்தைத்திரிபந்தாதி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 335

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயத்து கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அணைத்தெழுந்த நாயகர் சிலை.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 11/Aug/2013 *திருச்சிராமலையமகவந்தாதி*

0 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருச்சிராமலையமகவந்தாதி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 334

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

திருவாவடுதுறை ஆலயத்தில் நந்திக்கு அருகில் உள்ள நரசிம்ம அரசன் சிலை.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 10/Aug/2013 *துறைசையமக அந்தாதி*

0 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

துறைசையமக அந்தாதி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 333

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

திருவாவடுதுறை ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்களின் ஒரு பகுதி

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 3/Aug/2013 *திருத்தில்லையமக அந்தாதி*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருத்தில்லையமக அந்தாதி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 332

நூலை வாசிக்க!

திருவாவடுதுறை ஆலயத்து நந்தி.

நூல் மின்னாக்கம்: முனைவர். சுபாஷிணி , பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர். சுபாஷிணி

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

தமிழ் மரபு அறக்கட்டளை - 12ம் ஆண்டு நிறைவு விழா

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டன. நினைத்துப் பார்க்கும் போதே ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. 2000ம் ஆண்டு ஜெர்மனியில் கருத்தளவில் தோன்றி 2001ம் ஆண்டு மலேசியத் தலைநகரில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டது தமிழ் மரபு அறக்கட்டளை.

இன்று ஈரோடு குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் நமது 12ம் ஆண்டு நிறைவு விழா மேலும் ஒரு புதிய பாதையை உருவாக்குவதாக, மாணவர் மரபு மையம் தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகப் பேராசிரியர்.டாக்டர்.நா.கண்ணன், பவளசங்கரி ஆகியோர் கல்லூரியில் இருக்கின்றனர்.

நிகழ்ச்சி நிரல்:

தமிழ் மரபு அறக்கட்டளையில் (மின்தமிழ்) இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இக்கணத்தில் என் அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முனைவர். சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES