மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2013 கோவிலூர் ஆதீனம்

0 மறுமொழிகள்

வணக்கம்.

காரைக்குடி நகரிலிருந்து 2கிமீ தூரத்தில் இருப்பது கோவிலூர் தமிழ் வேதாந்த மடம். 250 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டதொரு மடம் இது. இம்மடத்தைத் தொடங்கியவர் தவத்திரு ஸ்ரீ முத்துராமலிங்க ஞான தேசிகர்.

இவ்வருடம் மார்ச் மாதம் எனது தமிழகத்துக்கானப் பயணத்தின் போது ஒரு நாள் முழுமையாக இத்திருமடத்தில் இருக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது கட்டப்பட்ட பழம் சிவாலயம் அருள் தரும் திருநெல்லை அம்மனுட கூடிய அருள் மிகு கொற்றவாள் ஈசுவரர் கோயிலுடன் இணைந்ததாக இந்தத் திருமடம் அமைந்திருக்கின்றது.

கோயில், அதனைச் சார்ந்த மடம் என்பதோடு நின்று விடாமல் ஒரு ஆரம்ப நிலைப்பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி, இசை, வாத்தியக் கருவிகள் கல்லூரி யோகா ஆராய்ச்சி மையம் என விரிவாக மடத்தின் செயல்பாடுகள் அமைந்திருகின்றன. மடத்தின் ஒரு அங்கமாக செட்டிநாடு பாரம்பரிய வரலாறு சொல்லும் அருங்காட்சியகம் ஒன்றும் நூலகம் ஒன்றும் இணைந்திருப்பதும் இம்மடத்தின் தனிச்சிறப்பு.

கோவிலூர் மடத்திற்கு என்னுடன் திரு.வினைத்தீர்த்தான், டாக்டர் வள்ளி, டாக்டர் காளைராசன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். மடாதிபதியுடன் நீண்டதொரு பேட்டி ஒன்றினை விழியப் பதிவாகச் செய்திருந்தேன். அதன் முதற்பகுதியை இன்று வெளியிடுகின்றேன்.

இந்த முதல் பேட்டியில் மடம் தொடங்கப்பட்ட வரலாறு, மடாதிபதிகள் வரலாறு தொடர்பான தகவல்களைத் தருகின்றார் சுவாமிகள். சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் கடந்த 2 ஆண்டுகளாக மடத்தின் 13வது பட்டமாக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர். பூஜைகள் மட்டுமன்றி மடத்தின் அனைத்து நிர்வாகம், கல்லூரிகளின் நிர்வாகம் ஆகியவற்றைத் தாமே நேரில் கவனித்துக் கொள்கின்றார்.

முதல் பேட்டியின் பதிவைக் காண இங்கே செல்க!

யூடியூப் பதிவாக இங்கே காணலாம். http://www.youtube.com/watch?v=_AyS-caSqHE&feature=youtu.be

சில படங்கள்:


டாக்டர்.வள்ளி, சுபா, சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், திரு.வினைதீர்த்தான்


திரு.வினைதீர்த்தான், டாக்டர்.காளைராசன், சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்






அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2013 கோவிலூர் ஆதீனம்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES