வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டன. நினைத்துப் பார்க்கும் போதே ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. 2000ம் ஆண்டு ஜெர்மனியில் கருத்தளவில் தோன்றி 2001ம் ஆண்டு மலேசியத் தலைநகரில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டது தமிழ் மரபு அறக்கட்டளை.
இன்று ஈரோடு குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் நமது 12ம் ஆண்டு நிறைவு விழா மேலும் ஒரு புதிய பாதையை உருவாக்குவதாக, மாணவர் மரபு மையம் தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகப் பேராசிரியர்.டாக்டர்.நா.கண்ணன், பவளசங்கரி ஆகியோர் கல்லூரியில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி நிரல்:
தமிழ் மரபு அறக்கட்டளையில் (மின்தமிழ்) இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இக்கணத்தில் என் அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முனைவர். சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை

மறுமொழிகள்
0 comments to "தமிழ் மரபு அறக்கட்டளை - 12ம் ஆண்டு நிறைவு விழா"
Post a Comment