THF Announcement: ebooks update: 31/Aug/2013 *மநோஹர ராம சரிதம்*

1 மறுமொழிகள்


வணக்கம்.

இன்று மேலும் ஒரு பழம் நூல் ஒன்று மின்னாக்கம் செய்யப் பெற்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது.

நூலின் பெயர்: மநோஹர ராம சரிதம் (முதற்பதிப்பு)
பதிப்பித்தவர்: பி.எஸ்.ராமஸ்வாமி ஐயர்

நூல் எண்: 339

மின்னாக்கம் , மின்னூலாக்கம்: டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன்.

நூலை வாசிக்க

முதற்பாகம்
இரண்டாம் பாகம்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: ebooks update: 31/Aug/2013 *மநோஹர ராம சரிதம்*"

திவாண்ணா said...
August 31, 2013 at 5:35 AM

ராமாயணம் மக்களை மிகவும் வசீகரித்து வந்திருக்கிறது. எத்தனை ரூபங்களில் கேட்டாலும் அலுக்காத இந்த இதிஹாசத்தை தானும் தன் நடையில் தமிழில் ஸ்லோகங்கள் மேற்கோளுடன் மக்கள் தமிழில் எளிதாக படுக்கும் பொருட்டு மநோஹர ராம சரிதம் என்ற பெயரில் கடத்தூர் ராமசாமி ஐயர் அவர்கள் 1914 இல் கோவையில் பதிப்பித்து இருக்கிறார்! 100 ஆண்டுகள் கடந்துவிட்டதால் நடை இக்கால மக்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கக்கூடும். தனக்குத்தமிழ் தெரியாது என்று முதலிலேயே ஒப்புக்கொண்டுவிட்ட படியால் அங்கங்கே காணப்படும் சொற்பிழைகளை விலக்கி கதையை மட்டுமே படித்து ஆனந்திக்கலாம்.
இதை எழுத, பதிப்பிக்க அவர் பெரும் சிரமப்பட்டு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. முதல் பதிப்பு 600 பிரதிகள் மட்டுமே! அடுத்த வருடமே அடுத்த பதிப்பு வெளியாகி உள்ளது! அத்யாத்ம ராமாயணம் முதல் பஞ்ச தந்திரம் வரை பல நூல்களில் இருந்தும் அவர் மேற்கோள்கள் எடுத்து ஆண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்.

பிரம்ம தேவனின் வலது புஜத்திலிருந்து உதித்த ஜாம்பவன் என்பவனது ஏழு புத்திரர்களில் அங்கதீரன் என்பவனால் ஆளப்பட்டு அவனுக்குப்பின் அவனது ஒன்பது புத்திரர்களில் ஒருவனான பரதன் என்பவனால் ஆளப்பட்டமையால் இது பரதக்கண்டம் என்று பெயர் பெற்றது என குறிப்பிடுகிறார். இது போல பல தகவல்கள் விரவி உள்ளதாக தெரிகிறது.

படித்து ஆனந்திப்போம்!

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES