திருப்பாவை - 1
நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியர்காலை நீராட அழைத்தல்
பெளளி ராகம், ஆதிதாளம்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.(*)
மார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது
குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே!
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்
கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான,
நந்தகோபனின் பிள்ளை
அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி
மேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட
நாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;
உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.\\
(*) திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றும் "ஏலோரெம்பாவாய்" என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவை நோன்பிற் காலந்து கொள்ளும் பெண்களை விளித்துக்கூறும் வண்ணம் அமைந்த வாய்பாடு போலவே இதனைக் கருதவேண்டும். சிலர் இதனை 'ஏல் ஓர் எம்பாவாய்' எனப் பிரித்துப் பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுவது எல்லாவிடத்திலும் பொருந்திவராது. ஆதலால் அடிநிறைக்கவந்த சொற்றொடராகவே இதனைக் கொள்ளுதல் தகுதி என்று கூறுவர். திருப்பாவையில் 'ஏலோரெம்பாவாய்" என்னும் சொல்லுக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்றுவிடுவது கருத்திற் கொள்ளவேண்டும். சான்றாக "பாரோர் புகழப் படிந்து" "உய்யுமா றெண்ணி உகந்து" "நீங்காத செல்வம் நிறைந்து" எனப் பாசுர முடிவுகள் (திருப்பாவை 1 - 3) பொருள் முற்றுபெற்று நிற்பதைக் காணலாம். "உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்" ( திருப்பாவை - 17) போன்ற பாசுர முடிவுகள் இதற்கு விலக்காக அமையும். எனவே பாவை பாடலுக்கு ஏற்ற மகுடமாகவும், அதே சமயம் அடிநிறைக்க வந்த சொற்றொடராகவும் இதனைக் கொள்வதுவே பொருத்தமாகும். பிற்காலத்தில் வந்த பாவை நூல்களும் "ஏலோரெம்பாவாய்" என்றே முடிவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது
Thiruppavai - 1
Raga: Bowli, Adi
In the Month of Margazhi of auspicious full-moon day
bejeweled girls who would join us for the bath!
come along prosperous young girls of Ayarppadi
Narayana is the son of Nandagopa renowned for his sharp spear and fierce
deeds ( towards enemies)
He is the darling-child, lion-cub of beautiful-eyed Yosada.
our dark-hued, lotus-eyed, radiant moon-faced Narayana alone will grant us our boons.
Girls come assemble for the paavai nonbu and win the world's praise.\\
[Picture shows Andal is extending an invitation to all the folk in her village to join her in the Margazhi bath festival. Krishna, the foster child of Yesodha and Nandagopala is identified with Narayana the cosmic lord Vishnu. He has four arms, bears the conch and discus, and sits on a serpent couch in Vaikuntha, guiding the souls seeking him. His consorts Bhu and Nila, seated on either side attend him.]
திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033
இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி
உபன்யாசம்: வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "திருப்பாவை - 01"
Post a Comment