திருப்பாவை - 4
மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்
வராளி ராகம் , ஆதிதாளம்
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
வருணதேவனே! சிறுதும் ஒளிக்காமல் கடலில் புகுந்து நீரைமொண்டு இடி இடித்து ஆகாயத்தில் ஏறி திருமாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்பநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னலடித்து, அவனுடைய சங்கம் போல் அதிர்ந்து முழங்க
உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல் மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ, நாங்களும் மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம்
Thiruppavai - 4
Raga : Varali, Adi
O lord Varuna Pray reveal yourself in full measure
Enter the deep ocean, gorge yourself roar and ascend high
darken like the hue of Padmanaba
strike lightning like the discus on his hands
roar with thunder like his great conch
come pouring down on us like arrows cast from his Sarnga bow
that we too may live and
enjoy the bath-festival of Margazhi
[ Picture shows Andal praying to the cloud lord for rains. Seen in the picture is Vishnu with his conch and discus]
திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033
இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "திருப்பாவை - 04"
Post a Comment