திருப்பாவை - 5
கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும்
ஸ்ரீ ராகம் , ஆதிதாளம்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி
வாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம் முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும் ஆகவே அவன் நாமங்களைச் சொல்!
Thiruppavai - 5
Raga : Sri, Adi
Kirshna, prince of Northern Mathura
who haunts the clean banks of Yamana
who took birth like a beacon among the cowherd clan
the jewel of his mother's womb
if we come pure and strew fresh flowers
with songs on our lips, feeling in our hearts
then he will forgive our past misdeeds and even what remains
will disappear like cotton unto fire
So come, let us praise him
[Picture shows Andal herself being worshipped, alongside Rangammannar her consort as in the temple at Srivilliputtur ]
திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033
இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி
ஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்
4 years ago
மறுமொழிகள்
0 comments to "திருப்பாவை - 05"
Post a Comment