திருப்பாவை - 10

1 மறுமொழிகள்

திருப்பாவை - 10

பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!
தோடி ராகம் , ஆதிதாளம்



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.


நோன்பு நேற்றுச் சுகம் அனுபவிப்பவளே!
வாசல் கதவை திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் ?
நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன்,
நம்மால் போற்றப்பட்டு அருள் புரிபவனான ராமாவதாரத்தில்
யமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடத்தில்
தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ ?
எல்லையற்ற சோம்பலுடையவளே! சிறந்தவளே
தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!



Thiruppavai - 10
Raga: Todi, Adi

O cousin entering high heaven through vows
will you not answer nor open the doors ?
In the days of yore, Kumbhakarna fell into the jaws of death
through our blessed boom giver, Narayana who wears the
fragrant Tulasi on his head
But did the demon then bequeath his sleep to you ?
O rare gem of immense stupour
Come quickly, open the door.

[ Picture shows Andal reminding her of Kumbahakarna, and tells her that joy awaits the girl only if she continues the vows for the month with faith.]




திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

மறுமொழிகள்

1 comments to "திருப்பாவை - 10"

enRenRum-anbudan.BALA said...
December 27, 2008 at 9:16 PM

கண்ணன் சார்,

என் திருப்பாவைப் பதிவுகளை வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.

தினம் ஒரு பாசுர விளக்கம் எழுதுகிறேன்.

தங்கள் கருத்தைச் சொல்லவும். ஏதாவது தவறிருப்பின் சுட்டினால், திருத்திக் கொள்கிறேன்.

பன்னிரெண்டாவது பாசுரம்:
http://balaji_ammu.blogspot.com/2008/12/493-tpv12.html

மற்ற பாசுரங்கள் இங்கே:
http://balaji_ammu.blogspot.com/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

ஆடியோவுக்கு என் நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES