கார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வாரா.?

0 மறுமொழிகள்
Aum
V.Subramanian
படிக்கவும்

செம்மொழி மாநாட்டில் அரசியல் வேண்டாம்!

'இலங்கை தமிழறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வாரா... மாட்டாரா?' என்பதுதான் தமிழகத்தில் பரபரப்பு விவாதமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை தெகிவல பகுதியில் வசிக்கும் 77 வயதான சிவத்தம்பியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்:

''கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் மாநாட்டுக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஏன் அனுமதி வழங்க வில்லை?''

''உலகத்தில் எங்கு உலகத் தமிழ் மாநாடு நடந்தாலும் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்திடம் முன்கூட்டியே தெரிவித்து, அவர்களுடன் இணைந்து நடத்துவதுதான் வழக்கம். தற்போது அந்த கழகத்துக்கு நெபுரூ கரோஷிமா தலைவராக இருக்கிறார்.அமைப்பின் செயலாளர்களில் ஒருவராக நான் இருக்கிறேன். இந்தியப் பிரிவு தலைவராக வா.செ.குழந்தைசாமி இருக்கிறார். தமிழக முதல்வர் கலைஞர் மாநாட்டை முதலில் பிப்ரவரி மாதம் நடத்துவோம் என அறிவித்தபோது, 'இவ்வளவுகுறைவான நேரத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாது!' என உலகத் தமிழறிஞர்கள் கருதினர். அதனால்தான் மாநாட்டை 2011-ம் வருடம் ஜனவரி மாதம் நடத்தும்படி கரோஷிமா கூறினார்.

ஆனால், தமிழகத்தில் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வைத்து அவ்வளவு காலம் தள்ள முடியாது என கலைஞர் கருதுவதாகத் தெரிவித்தார். ஆனாலும் கரோஷிமா சில விஷயங்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டினார். ஆகவே, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரனிடம் உலகத் தமிழ் மாநாடு என்பதற்கு பதிலாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என நடத்தலாம் என்ற என் எண்ணத்தைச் சொன்னேன். அதன்படியே அந்த மாநாடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் நெபுரூ கரோஷிமாவும் கலந்துகொள்வார் என நம்புகிறேன்.''

''இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி நடந்துகொண்ட விதம் திருப்தி அளிக்காததால், மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என செய்திகள் வெளியாகியிருக்கிறதே....?''

''முதலில், இந்த விவகாரம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்துகள் சற்றுத் தவறான கண்ணோட் டத்தில் பார்க்கப்பட்டது. நானும் சில கருத்துகளை லேசான தடுமாற்றத்துடன் தெரிவித்தேன். இப்போது ஜூ.வி-க்கு நான் சொல்லும்


விஷயங்களை, கோவை உலக செம்மொழித் தமிழ் மாநாடு தொடர்பான என் தெளிவான, இறுதியான, உறுதியான நிலைப்பாடாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்...

கடந்த ஒன்பது ஆண்டுகளில் சர்வதேச அளவில் தமிழுக்காக மாநாடு நடக்காத நிலையில், அதிலும் தமிழ் செம்மொழி ஆன பிறகு இந்த மாநாடு நடப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறேன். அதோடு, மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆர்வமும் எனக்கிருக்கிறது. என் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பார்க்கையில்,அதில் கலந்துகொள்வது குறித்து உடனே என்னால் தெரிவிக்க இயலாது. உரிய நேரத்தில் என் முடிவைத் தெரிவிப்பேன். இதில் சிலர் தங்களுடைய ஆசைகளையும் எண்ணங்களையும் என் மேல் திணிக்க முயல்கிறார்கள். நான் தமிழை நேசிப்பவனே தவிர, அரசியலை அல்ல.''

''மாநாட்டுக்கு தங்களை வரவிடா மல் தடுக்க சில ஆதிக்க சக்திகள்முயல் வதாக கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?''

(பலமாகச் சிரிக்கிறார்...) ''இதில் கலைஞர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் என்னை மாநாட்டுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார். நானும் பரிசீலிப்பதாகச் சொல்லி யிருக்கிறேன். மற்றபடி, நான் மாநாட்டுக்கு வருவதை தடுக்க சில சக்திகள் விரும்புவதாகச் சொல்லப்படும் அரசியலுக்குள் நான் வர விரும்பவில்லை. அரசி யல் வேறு, தமிழ்மொழி வேறு. இரண்டையும் கலக்கவேண்டாம். நான் மாநாட்டுக்கு செல்ல முடிவெடுத்து விட்டால், என்னை யாராலும் தடுக்க முடியாது!''

''கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் விவாதத்தில் இடம்பெற வேண்டும்?''

''இந்த மாநாட்டில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. செம்மொழி பற்றிய கொள்கைகள்... குறிப்பாக, தமிழ் செம்மொழி ஆன பிறகு அதற்கான கொள்கை வரைவு செய்யப் பட வேண்டும். சைனீஸ், கிரீக், சம்ஸ் கிருதம், லத்தீன், ஹீப்ரு போன்ற உலகச் செம்மொழிகளின் கொள்கைகளை ஆராய்ந்து, அவற்றுடன் செம்மொழி தமிழை ஒப்பிட்டு... கொள்கைகள் வரைவு செய்யப்பட வேண்டும். இந்திய மொழி வம்சம் பற்றிய அறிமுகங்களோடு, சுமேரிய மொழியும் தமிழும்,ஜப்பானிய மொழியும் தமிழும் போன்ற விஷயங்களும் ஆராயப்பட வேண்டும். இந்தோ - ஆரியன், இந்தோ - ஆரியன் - திராவிடன் போன்ற கலாசாரங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மருத்துவம், வானியல் மற்றும் ஜோதிடத்தில் செம்மொழியாக தமிழ் பயன்படும் விதம், தமிழகத்தில் ஆட்சிமொழியான தமிழ், இலங்கையில் தமிழ், மலேசியா - சிங்கப்பூர் - தென்னாப்பிரிக்காவில் தமிழின் வளர்ச்சி நிலை, மேற்கத்திய நாடுகளில் சமகால மொழியாக இருந்த தமிழைப் பற்றிய ஆய்வுகள் ஆகியவை நடத்தப்படவேண்டும். இவைதான் செம்மொழி யான தமிழை இன்னும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்கச் செய்யும்!''

''இலங்கையில் தமிழர் கள் முள்வேலிக்குள் கடும் அவதிப்படும் சூழலில் இந்த மாநாடு எந்தளவு அவசியம்?''

''உலக நாடுகள் மற்றும் ஐ.நா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் முள்வேலி அவதி பற்றி வருத்தம் தெரிவித்திருக்கின்றன. தமிழர்கள் விரைவில் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் என் எண்ணம். தமிழ் மொழி மாநாடு என்பது, தமிழுக்கான கௌரவம். எனவே, இந்த விஷயத்தையும் தமிழ் மொழி மாநாட்டையும் இணைத்துப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.''

''இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை துடைக்கவே இந்த நேரத்தில் செம்மொழி மாநாட்டை கருணாநிதிநடத்துவதாக தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டு கின்றனவே?''

''இம்மாநாடு அரசியலைத் தாண்டியதாகும். இதற்கு அரசியல் சாயம் பூச முயலக் கூடாது. அதை விடுத்து தமிழ் மொழி பற்றிய சீரியதோர் மாநாட்டினை அரசியலாக்கி, அதற்குக் களங்கம் கற்பிப்பது அழகல்ல..!'

நன்றி: ஜூனியர் விகடன் 04 11 09

இன்னம்பூரான்


சில முக்கிய இணைய முகவரிகள்

0 மறுமொழிகள்

எட்டுத் தொகை நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
கம்பரின் படைப்புகள்
ஐம்பெருங் காப்பியங்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள்

திருஞானசம்பந்தரின் படைப்புகள்
திரிகூடராசப்பரின் படைப்புகள்
ஸ்ரீகுமரகுருபரரின் படைப்புகள்
சைவ சித்தாந்த நூல்கள்
மெய்கண்ட சாத்திரங்கள்
முருக பக்தி நூல்கள்
ஔவையாரின் படைப்புகள்
நீதி நூல்கள்
இலக்கண நூல்கள்

மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்
பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரையின் படைப்புகள்
சிறுகதைகள்
புதினங்கள்

கட்டுரை நூல்கள்

டாக்டர் மு.வரதராசனாரின் படைப்புகள்
புதினங்கள்
சிறுகதைகள்
ந.பிச்சமூர்த்தியின் படைப்புகள்
சிறுகதைகள்



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க


-=-=-=-=-=-=-=-=-=-=-=
ஓம்.
தமிழ் நூல்கள் தேவைக்கு இறக்கம் செய்துகொள்ள
நன்றி, சென்னைலைப்ரரி.டாட்.காம்
வெ.சுப்பிரமணியன் ஓம்.


கே.பி.சுந்தராம்பாள்

0 மறுமொழிகள்

Courtesy: Srinivasan S
Subject: K.B.Sundarambal...


Aum.V.Subramanian Aum


Kodumadi Balambal Sundarambal  (1908-1980) was a renowned stage artist and singer of South India. She was popularly referred to as the "Queen of the Indian stage."  She was noted both for her resonant, vibrant voice and for the dignity of her performances. A political activist during the Indian independence movement, K.B. Sundarambal was the first film personality to enter a state legislature in India.

?ui=2&view=att&th=12496d39c57091fe&attid=0.1&disp=attd&realattid=ii_12496d39c57091fe&zw


Whilst returning from Trichy on 26th night.... where the bus stopped for TEA/COFFEE... i found a CD with good collection of songs of her.... thus the link for downloading those songs...

in my mediafire account, i have created a folder KBSundarambal with 9 sub-folders.

  • Devotional-1  ==>> 9 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e8128cea5b521dcf5d79b20786b9a6e1ed0
  • Devotional-2  ==>> 6 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e8128cea5b521dcf5d716f8cf40558950b4
  • Devotional-3  ==>> 4 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e8128cea5b521dcf5d7daada8390b259c5f

  • Devotional-4  ==>> 10 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b492595bc19e6628dc
  • Devotional-5  ==>> 10 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b43e34c0a955f98962
  • KBS-Avvayar-Karaikkal Ammayar  ==>> 17 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b43e34c0a955f98962
  • KBS-Hits  ==>> 11 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e814481d7a4359f3014935cbde7375ca78c
  • KBS-Live  ==>> 3 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b4759e682a8cd2154a
  • KBS-Pazhamneeyappa  ==>> 14 songs.
http://www.mediafire.com/?sharekey=ff6ccf9d6cdacfcd8ef1259ff1b60e81c1bac886e4d622b4935cbde7375ca78c


hope the recording is good and you all will enjoy.

though
Thanks to
cheenu@coimbatore
09360069227
==========================
SADSANGATHWE NISSANGATHWAM, NISSANGATHWE NIRMOHATHWAM, NIRMOHATHWE NISCHALA THATHWAM, NISCHALA THATHWE JEEVANMUKHTHI:




Re: சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்

0 மறுமொழிகள்


2009/10/22 Venkatachalam Subramanian <v.dotthusg@gmail.com>
சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்..
 



சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்

0 மறுமொழிகள்



 

சித்தர் வாக்கில் பழமொழிகள்.


 

 ஓம்

சித்தர் பழமொழிகள்.

சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை அன்பர் சி.எஸ். முருகேசன் தொகுத்தளித்திருக்கிறார்.

  1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
  2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
  3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
  4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
  5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
  6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்
1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா  அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன  பிரியும், பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

பட்டினத்தார் திருப்பாடல் திரட்டு
--------------------------------------------------
கோயில் திரு அகவல்--1.
~~~~~~~~~~~~~~~~~
நினைமின் மனனே! நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க!

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்.

அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன வுவப்பாம்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், நினைக் கொன்றன.


ஓம். அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.









 


சிவ நாம பெருமை

0 மறுமொழிகள்
ஓம்.
சிவநாமாவின் பெருமை.
ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் அருளிய நன்மொழிகள், மதராஸ் லா ஜர்னல் ஆபீஸ் மைலாபூர் சென்னை -4

ஆன்மீகப் பாதையில் அன்பர்களை அழைத்துச் செல்ல பரமாச்சார்யார் அருளிய மொழிகள் பவித்ததிரமானவை. அவைகளில் சில துளிகள் இங்கே இடம்பெறுகின்றன
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.

வேதங்களின் ஸாராம்சமாக இருப்பது ஸ்ரீ ருத்ரம்.
ஸ்ரீ ருத்ரத்தில் சங்கர ஸ்வரூபத்துக்கு அடுத்தபடியாக சிவஸ்வரூபம் சொல்லப்பட்டிருகினறது.

ஜனங்கள் தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங்களில் பண்ண்ய பாபத்தைப் போக்க ஸுலபமான உபாயம் நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? பாப பரிஹாரத்துக்கு ஸுலபமான வழி பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுகாச்சாரியார் ஏழு நாளில் பரீக்ஷித்துக்குப் பாகவதத்தை உபதேசித்தார். அந்த பாகவதத்தில் தாக்ஷாயணியின் கதை வருகிறது. அதில் மோக்ஷம் அடைய ஓர் உபாயம் சொல்லபட்டிருக்கிறது.

தாக்ஷாயணி என்பது அம்பிகையின் பெயுர். பார்வதியாக வருவதற்கு முன்பு தக்ஷனுக்குப் புத்திரியாக தாக்ஷாயணி என்னும் பெயருடையவளாக இருந்தாள். தக்ஷன் சிவனை நிந்தித்தான். அதனால் அவனுக்குப் பெண்ணாக இருப்பது கூடாது என்று அந்த தேஹத்தை விட்டுவிட்டு பார்வதியாக அவதரித்தாள்.

பரிமளம் என்று அப்பைய தீக்ஷிதர் ஒரு கிரந்தம் எழுதியிருக்கிறார். வாசஸ்பதிமிச்ரர் பாமதி என்று ஒரு கிரந்தம் எழுதியிருக்கிறார். அதனுடைய வியாக்கியனம் கல்பதரு என்பது. அதனுடைய வியாக்கியானம் தான் பரிமளம் என்பது. அந்த பரிமளத்தை ஒருவர் கண்டனம் பண்ணினார். அவ்ர் கண்டனம் பண்ணினார் என்று யாரோ வந்து அப்பைய தீக்ஷிதரிடம் சொன்னார். அப்போது அவர் மூக்கைப் பிடித்துக்கொண்டார். பரிமள கண்டனம் பண்ணினால் அபரிமளம் தானே உண்டாகும். அது போல தக்ஷன் சிவஸ்வரூபத்தைத் துவேஷித்தான். ஸர்வ மங்கள மூர்த்தி சிவன். சிவனிடம் துவேஷம் வந்தால் அவர்களிடம் அசிவம்தான் இருக்கும். அதாவது அமங்களம், அகல்யாணம் என்பவைதான் இருக்கும்.

யாராவது முன் காலத்தில் உடன்கட்டை ஏறினால் அவர்களுடைய துணியை வைத்து ஆராதனம் செய்வார்கள். அவர்க்ள் ஆத்ம ஞானியின் நிலையை அடைந்தவர்கள். எல்லாவற்றையும் தியாகம் பண்ணும் சக்தி இருப்பதால் அவர்கள் பூஜிக்கப்படுகிறார்கள். அந்த நிலையில் இருந்து அம்பிகை சொன்னது இது. அந்த ஸமயத்தில் சொன்ன ஸத்தியத்துக்கு விலையே இல்லை.அக்கினி குண்டத்தில் பாதிவிரயத்தைக் காப்பாற்றிக் கொள்ளச் சரீரத் தியாகம் செயும் பொழுது சொன்னத் வார்த்தையை விட ஸத்தியமான வேறு வார்த்தை கிடையாது.

பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்ஸம் பணும் ஒரு வஸ்து உண்டு. அந்த வஸ்துவைப் பல இடங்களுக்குப் போய்த் தேடவேண்டாம். இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. ஸகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது அது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேஹத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்க்கிறது. அதை என்ன பண்ணவேண்டும்? வாக்கினாற் சொல்லவேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாய்ப் பிறந்தவன் சொல்ல வேண்டும். மனிதன் அதைச் சொல்லாவிட்டால், இவனுக்கு நாக்கு இருந்தும் பிரயோஜனமில்லை. ஆகையால் எல்லோரும் அதைச் சொல்லியாகவேண்டும். அதை ஒருதரம் சொன்னாற் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிடும்.


இந்த விஷயம் பாகவதத்தில் சொல்லியிருப்பது விசேஷம். சிவ புராணத்தில் சொல்லப்பட்டிருந்தால், ஸ்தோத்திரம் என்று சொல்லி விடலாம். பாகவதத்திலே விஷ்ணு ஸ்தோத்ரம் இருந்தால் அது அவ்வளவு விசேஷமானது அல்ல. இது உத்தம ஸதி, உத்தமமான காலத்தில் சொன்னது. சுகாச்சாரியார் பரீக்ஷித்திற்குச் சொல்லும் ஸத்திய வாக்கியம்.

பரமேஸ்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதானாலும் கேட்பதானாலும் பவித்திரர்களாகிறோம். அவருடைய ஆக்ஞையை எவரும் மீறமுடியாது.அவரால் எல்லாம் சுற்றுகின்றன.அஹம்பாவமாக இருக்கும் பொழுது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்புச் செய்தால் நாம் அடிக்கிறோம். அது போல பரமேசுவரன் தெவதைகளைச் சிக்ஷித்தார். காளகூட விஷம் பாற்கடலில் உண்டானபோது அதைச் சாபிட்டு அவர்களை ரக்ஷித்தார். ஸகல தேவதைகளும் பரமேசுவரனுடைய குழந்தைகள்.

பரமேசுவரனை நாம் நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ணவேண்டாம். அவருடைய நாமாவே போதும். நமக்கு நன்றாகத் தெரிந்தது அது. நம்முடைய மதத்தில் பாப பரிஹாரத்துக்கு ஸுலபமான மார்க்கம் இருப்பதாகச் சோன்னேன். அது இந்த நாம ஸ்மரணம் தான். பிரதோஷ காலத்தில் இந்த நாமாவைச் சொன்னால் போதும்.

அப்பேர்ப்பட்ட ஸர்வேசுவரன், ஸகல வேத சாஸ்திரங்களின் தாத்பரியமாக ஓங்கார ஸ்வரூபமாக இருக்கிறார். ஓங்காரம் தான் எல்லாத் தத்துவங்களுக்கும் முடிவானது.

பரமேசுவரன் ஓங்காரம். ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான்.

சிவஸ்வரூபந்தான் பரப் பிரம்மம். ஸாயங்கால வேளைகளில் சிவ தியானம் செய்ய வேண்டும். பிரதோஷ காலத்தில் ஈசுவர தரிசனம் செய்ய வேண்டும். ஈசுவரன் கோயிலில் பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் வந்து ஈசுவர தரிசனம் செய்கிறார்கள்.

பரமேசுவரனுடைய நாமாவாகிய 'சிவ' என்பது வேதத்தின் மத்திய ஸ்தானத்தில் இருக்கிறது. லோகத்தில் ஈசுவரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹா புருஷன்..

பரமேசுவரனுடைய நாமாவின் பெருமை சுருதியில் கர்ம காண்டமாகிய ஸ்ரீருத்திரத்திலும் ஞான காண்டமாகிய மாண்டூக்யோபநிஷத்திலும் மற்ற ஸூத்திரங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருகிறது. ஈசானன் என்னும் சப்தத்துக்கு எது அர்த்தமோ அதுதான் பரமேசுவர ஸ்வரூபமும்.

இவ்வளவுக்கும் பாம தாத்பரியமாக ஒன்று இருக்கிறது. அதுதான் இந்த இரண்டெழுத்து 'சிவ' . சிவ என்பதை 'சிவா' என்று சொன்னால், அது அம்பிகையின் பெயர் என்று வேதம் சொல்லுகிறது.

பரம சிவனுக்கு இரண்டு சரீரங்கள் இருக்கின்றன. ஒன்று பரம மங்கள ஸ்வரூபம். மற்றொன்று எலும்பை அணிந்து கொண்டு ஜடாதாரியாக இருக்கிற ஸ்வரூபம். ஸர்வ மங்களை என்பது அம்பாளின் பெயர். அந்த அம்பாள் தான் உயிர். இந்த இரண்டு ஸ்வரூபங்களும் லோகத்தில் எல்லோருக்கும் பிதாவாகவும் மாதாவாகவும் இருக்கின்றன. 'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்களை எப்போது ஸந்தர்ப்பம் நேர்ந்தாலும் உச்சாரணம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். எந்த ஜன்மம் வந்தாலும் அதை மறக்காமல் இருக்க வேண்டும். அப்படி யிருந்தால் ஜன்மமே இல்லாத பரம சாந்த நிலை உண்டாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செய்தி மூலம்: குமுதம் பக்தி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓம்.வெ.சுப்பிரமணியன் ஓம்

English learning for students

0 மறுமொழிகள்



http://www.english-for-students.com/index.html
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

ஓம்.
ஆங்கிலம் கற்போருக்கென ஒரு இணையதளம்.
வெ.சுப்பிரமணியன் ஓம்

Let us see what the Correct Usages are.

I came across these sentences in emails I received recently.

1. I look forward to hear from you soon.

2. If anyone is interesting in doing a work shop or presentation, please contact our Events Coordinator.

3. I am awaiting for my classmate.


All the three sentences are incorrect.



Each sentence has either incorrect grammatical construction or inappropriate word.

The meaning of the expression to look forward to is to wait for or anticipate something pleasant.

The first sentence I look forward to hear from you should be rewritten as I look forward to hearing from you in order to make it correct.

Why?

Let us see what the Correct Usages are.

You look forward to something and not look forward to do something. The phrase look forward to is followed by a noun phrase or a verb phrase with an -ing pattern.

Look at these examples:

• I am looking forward to your birthday party next week.

• We all look forward to meeting you.

• I look forward to presenting a paper at the international conference.


In the next sentence, the word interesting should be replaced by interested in order to bring out the intended meaning.

The word interested is an adjective and it says how someone feels whereas the word interesting which is also an adjective describes the people or things that cause the feelings.

Here are a few examples:

• I was very interested in meeting him.

• My son is interested in mathematics whereas my daughter is interested in English.

• My research supervisor is an interesting person. We all like him very much.

• He is interested in American literature.

• Have you read the novel Love Story? It is a very interesting book.


The third sentence is also incorrect. It can be rewritten as I am waiting for my classmate in order to make it grammatically acceptable.

Speakers often mention what or who they have been waiting for as in the examples below:

• Who are you waiting for?

• I am waiting for my girlfriend.


The word await means wait for. It is not followed by the preposition for. It takes an inanimate object as in the example I am awaiting your email. The object of await is not a person. So it is incorrect to say : Peter is awaiting me.

The word await is a formal term and is used in letters, emails and poetry.

• I am awaiting your reply.

• She is very happily awaiting death.


Other Correct Usages :

  • What is the difference in meaning between Envy and Jealousy?
  • Does the word Government take a singular or plural verb?
  • Is the word motor mouth used to refer only to women?
  • What is the meaning of the term Eve-Teasing?
  • Foodie : What is the original meaning of the word?
  • Web 2.0 : What is the original meaning of the word?
  • Can the word best be used as a verb?
  • What is the meaning of the expression to gain upon someone?
  • Is to catch someone on the hop an idiomatic expression?
  • Let us see how inversion should be used.

  • What is the difference in meaning between Able and Capable?
  • Kindly : Are we using this term in a correct way?
  • What is Zero-Sum Game?
  • Lunch or Lunches : Which is the correct word?
  • Few words on Figures of Speech.
  • Why should we use Transition Words?
  • How to improve My Language Skills?
  • Let us see few Indian English Expressions.
  • There are few tales about Parodies.
  • look forward to : How to use this phrase?

  • What is the difference between Interesting and Interested?
  • What is the difference between Await & Wait For?












  • From Correct Usages to HOME PAGE


    அகநானூறில் பாடிய புலவர் பெருமக்கள்

    2 மறுமொழிகள்
    அகநானூறில்
    பாடிய புலவர் பெருமக்கள்
    -==-=-=-=-=-=-=-=-=-=-=-




    ஓம்.
    அகநானூறில்
    பாடிய புலவர் பெருமக்கள்


    1. அந்தியிளங்கீரனார்
    2. அம்மூவனார்
    3. அள்ளூர் நன்முல்லையார்
    4. அண்டர் மகனார் குறுவழுதியார்
    5. அஞ்சியத்தை மகள் நாகையார்
    6. அதியன் விண்ணத்தனார்
    7. ஆலம்பேரி சாத்தனார்
    8. ஆற்காடு கிழார் மகனார் வெள்ளக் கண்ணத்தனார்.
    9. ஆலங்குடி வங்கனார்
    10. ஆவூர் மூலங்கிழார்
    11. ஆமூர்க் கவுதமன் சாதேவனார்
    12. ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
    13. ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலச் சாத்தனார்
    14. இடைக்காடனார்
    15. இடையன் நெடுங்கீரனார்
    16. இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
    17. இறங்குகுடிக் குன்றநாடன்
    18. இடையன் சேந்தங் கொற்றனனார்
    19. இம்மென் கீரனார்
    20. ஈழத்துப் பூதன் தேவனார்
    21. உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
    22. உலோச்சனார்
    23. உம்பற்காட்டு இளங்கண்ணனார்
    24. உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார்
    25. உறையூர் மருத்துவன் தாமோதரனார்
    26. உறையூர் முதுகூத்தனார்
    27. ஊட்டியார்
    28. எயினந்தை மகனார் இளங்கீரனார்
    29. எருமைவெளியனார்
    30. எருமை வெளியனார் மகனார் கடலனார்
    31. எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
    32. எழுஉப்பன்றி நாகன் குமரனார்
    33. ஐயூர் முடவனார்
    34. ஒக்கூர் மாசாத்தனார்
    35. ஓரோடோகத்துக் கந்தரத்தனார்
    36. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
    37. ஒக்கூர் மாசாத்தியார்
    38. ஓரம் போகியார்
    39. ஔவையார்
    40. கடுந்தொடைக் காவினார்
    41. கபிலர்
    42. கயமனார்
    43. கருவூர்க் கண்ணம் புல்லனார்
    44. கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
    45. கல்லாடனார்
    46. காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
    47. காவ ன் முல்லைப் பூதரத்தனார்
    48. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
    49. காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
    50. குன்றியனார்
    51. குடவாயிற் கீரத்தனார்
    52. குறுங்குடி மருதனார்
    53. கடியலூர் உருத்திரங் கண்ணனார்
    54. கருவூர்க் கண்ணம் பாளனார்
    55. கருவூர்க் கலிங்கத்தனார்
    56. கருவூர் நன்மார்பனார்
    57. கழார்க் கீரன் எயிற்றியனார்
    58. காவன் முல்லைப் பூதனார்
    59. குமுழி ஞாழலார் நப்பசலையார்
    60. குறு வழுதியார்
    61. கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
    62. கொடியூர்கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
    63. கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
    64. கருவூர்க் கந்தபிள்ளைச் சாத்தனார்
    65. காவட்டனார்
    66. சாகலனார்
    67. சீத்தலைச் சாத்தனார்
    68. செல்லூர்க் கோசிகன் கண்ணனார்
    69. சாகலாசனார்
    70. செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்
    71. செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்
    72. சேரமான் இளங்குட்டுவன்
    73. சேந்தன் கண்ணனார்
    74. தங்கால் முடக் கொற்றனார்
    75. தங்கால் பொற் கொல்லனார்
    76. தாயங் கண்ணனார்
    77. தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
    78. தொல் கபிலர்
    79. நக்கீரனார்
    80. கணக்காயனார்
    81. மதுரை நக்கீரர்
    82. நல்லாவூர்க் கிழார்
    83. நல் வெள்ளியார்
    84. நண்பலூர்ச் சிறுமேதாவியார்
    85. நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க் கிழார்
    86. நொச்சி நியமங்கிழார்
    87. நோய் பாடியார்
    88. நக்கண்ணையார்
    89. நரைமுடி நெட்டையார்
    90. பரணர்
    91. பாண்டியன் அறிவுடை நம்பி
    92. பாண்டியன் கானப் பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
    93. பாலை பாடிய பெருங் கடுங்கோ
    94. பெருங்குன்றூர்க கிழார்
    95. பெருந்தலைச் சாத்தனார்
    96. பெருந்தேவனார்
    97. பொருந்தில் இளங்கீரனார்
    98. போந்தைப் பசலையார்
    99. பேயனார்
    100. பேரி சாத்தனார்
    101. பொதும்பில் கிழார் வெண்கண்ணனார்
    102. பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
    103. பறநாட்டுப் பெருங் கொற்றனார்
    104. பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
    105. பாவைக் கொட்டிலார்
    106. பிசிராந்தையார்
    107. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
    108. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
    109. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தனார்
    110. மதுரை எழுத்தாளன்
    111. மதுரைக் கணக்காயனார்
    112. மதுரைக் கணியன் பூதத்தனார்
    113. மதுரைக் காஞ்சிப் புலவர்
    114. மதுரை செங்கண்ணனார்
    115. மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்
    116. மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்.
    117. மதுரைப்பாலாசிரியர் நற்றமனார்
    118. மதுரைப் பேராலவாயார்
    119. மதுரைப்போத்தனார்
    120. மதுரை மருதனில நாகனார்
    121. மருதன் இளநாகனார்
    122. மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்
    123. மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்
    124. மருதம் பாடிய இளங்கடுங்கோ
    125. மாமூலனார்
    126. மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
    127. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
    128. மதுரை ஈழத்துப் பூதஞ்சேந்தனார்
    129. மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார்
    130. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
    131. மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
    132. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
    133. மதுரைத் தமிழ்கூத்தன் நாதன் தேவனார்
    134. மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
    135. மதுரைப் புல்லங்கண்ணனார்
    136. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
    137. மதுரை மள்ளனார்
    138. முள்ளியூர்ப் பூதியார்
    139. மோசிக் கரையனார்
    140. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
    141. மதுரை இளங்கௌசிகனார்
    142. மதுரைக் கண்ணத்தனார்
    143. மதுரைக் கூத்தனார்
    144. மதுரைத் தத்தங் கண்ணனார்
    145. மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
    146. மதுர மருதங்கிழார் மகனார்ப் பெருங்கண்ணனார்
    147. மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்
    148. மோசிக் கீரனார்
    149. வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
    150. வண்னப்புறக் கந்தரத்தனார்
    151. வடமோதங் கிழார்
    152. விற்றூற்று மூதெயினனார்
    153. வெள்ளாடியனார்
    154. வெள்ளி வீதியார்
    155. வெறி பாடிய காமக் கண்ணியார்
    156. வீரை வெளியன் நித்தனார்
    157. வெண்கண்ணனார்
    158. வேம்பற்றூர்க் குமரனார்.

    செய்தி மூலம் “தமிழ் அறிஞர்கள்’ மு.அப்பாஸ்மந்திரி
    ஓம்.வெ.சுப்பிரமணியன் ஓம்.

    புறநானூறில் பாடிய புலவர்கள்

    0 மறுமொழிகள்
    ஓம்.
    புறநானூறில் பாடிய புலவர்கள்

    1. அடைநெடுங்கல்வியார்
    2. அண்டர் மகன் குறுவழுதி
    3. அரிசில் கிழார்
    4. அள்ளூர் நன்முல்லையார்.
    5. ஆடுதுறை மாசாத்தனார்
    6. ஆலங்குடி வங்கனார்
    7. ஆலத்தூர் கிழார்
    8. ஆலியார்
    9. ஆவூர் கிழார்
    10. ஆவூர் மூலங்கிழார்
    11. இடைக்காடனார்
    12. இடைக்குன்றூர் கிழார்
    13. இரும்பிடர்தலையார்
    14. உலோச்சனார்
    15. உறையூர் இளம் பொன்வாணிகனார்.
    16. உறையுர் ஏணிச்சேரி முடமோசியார்
    17. உறையூர் மருத்துவன் தாமோதரனார்
    18. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
    19. உறையூர் முதுகூத்தனார்.
    20. ஊன்பொதிபசுங்குடையார்
    21. எருக்காட்டூர்த் தாயாங் கண்ணனார்
    22. எருமை வெளியனார்
    23. ஐயாதிச் சிறுவெண் தேரையார்
    24. ஐயூர் முடவனார்
    25. ஐயூர் மூலங்கிழார்
    26. ஒக்கூர் மாசாத்தனார்
    27. ஒக்கூர் மாசாத்தியார்
    28. ஒருசிறைப் பெரியனார்
    29. ஒருஉத்தனார்
    30. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
    31. ஓரம் போகியார்
    32. ஓரேருழவர்
    33. ஔவையார்
    34. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
    35. கண்ணகனார்
    36. கணியன் பூங்குன்றனார்
    37. கதையங்கண்ணனார்
    38. கபிலர்
    39. கயமனார்
    40. கருங்குழலாதனார்
    41. கருவூர்க்கதப்பிள்ளை
    42. கருவூர்க் கதப் பிள்ளை சாந்தனார்
    43. கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பூதநாதனார்.
    44. கல்லாடனார்.
    45. காழாத்தலையார்
    46. கழைதின் யானையார்
    47. கள்ளில் ஆத்திரையனார்
    48. காக்கைப் பாடினியார்
    49. காரிகிழார்
    50. காவிட்டனார்
    51. காவற் பெண்டு
    52. காவிரிப் பூம் பட்டணத்துக் காரிக்கண்ணனார்
    53. குட்டுவன் கீரனார்
    54. குடபுலவியனார்
    55. குடவாயிற் கீரத்தனார்
    56. குண்டுகட்பாலியாதன்
    57. குளம்பா தாயனார்
    58. குறமகள் இளவெயினி
    59. குறங்கோழியூர் கிழார்
    60. குன்றூர்கிழார் மகனார்
    61. கூகைக் கோழியார்
    62. கூடலூர்க் கிழார்
    63. கோடைபாடிய பெரும்பூதனார்
    64. கோதமனார்
    65. கோப்பெருஞ்சோழன்
    66. கோவூர் கிழார்
    67. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
    68. சங்க வருணரென்னும் நாகரியர்
    69. சாத்தந்தையார்
    70. சிறுவெண் தந்தையார்
    71. சேரமான்கணைக்கால் இரும்பொறை
    72. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
    73. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
    74. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
    75. சோழன் நல்லுருத்திரன்
    76. சோழன் நலங்கிள்ளி
    77. தன் காற்பூண் கொல்லனார்
    78. தாமப்பல் கண்ணனார்
    79. தாயங்கண்ணியார்
    80. திருத்தாமனார்
    81. தும்பி சொகினனார்
    82. துறையூர் ஓடைககிழார்
    83. தொழுந்தலை விழுத்தண்டினார்
    84. தொண்டைமான் இளந்திரையனார்.
    85. நரிவெரூஉத்தலையார்
    86. நல்லிறையனார்
    87. நன்னாகனார்
    88. நெட்டிமையார்
    89. நெடுங்கழுத்துப் பரணர்
    90. நெடும்பல்லியத்தனார்
    91. நொச்சி நியமங்கிழார்
    92. பக்குடுக்கை நன்கணியார்
    93. பரனார்
    94. பாண்டரங்கண்ணனார்
    95. பாண்டியன் அறிவுடை நம்பி
    96. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
    97. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
    98. பாரதம் பாடிய பெருந்தேவனார்
    99. பாரிமகளிர்
    100. பாலை பாடிய பெருங் கடுங்கோ
    101. பிசிராந்தையார்
    102. பிரமனார்
    103. புல்லாற்றூர் எயிற்றியனார்
    104. புறத்திணை நன்னாகனார்
    105. பூங்கணுத்திரையார்
    106. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
    107. பெருங்குன்றூர்க் கிழார்
    108. பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
    109. பெருஞ்சித்திரனார்
    110. பெருந்தலைச் சாத்தனார்
    111. பெரும்பதுமனார்
    112. பேய்மகள் இளவெயினி
    113. பேரெயில் முறுவலர்
    114. பொத்தியார்
    115. பொய்கையார்
    116. பொருந்தில் இளங்கீரனார்
    117. பொன்முடியார்
    118. மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்
    119. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.
    120. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
    121. மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
    122. மதுரைக் கணக்காயனார்
    123. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
    124. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
    125. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
    126. மதுரைத் தமிழ்க் கூத்தனார்
    127. மதுரை நக்கீரர்
    128. மதுரைப் படைமங்க மன்னியார்
    129. மதுரைப் பூதனிள நாகனார்
    130. மதுரைப் பேராலவாயார்
    131. மதுரை மருதனில நாகனார்
    132. மதுரை வேளாசான்
    133. மருதனில நாகனார்
    134. மாங்குடிகிழார்
    135. மாதி மாதிரத்தனார்
    136. மார்க்கண்டேயனார்
    137. மாற்பித்தியார்
    138. மாறோக்கத்து நப்பசலையார்
    139. முரஞ்சியூர் முடிநாகராயர்
    140. மோசி கீரனார்
    141. மோசி சாத்தனார்
    142. வடம நெடுந்தத்தனார்
    143. வடம வண்ணக்கன் தாமோதரனார்
    144. வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
    145. வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
    146. வடமோதங்கிழார்
    147. வன்பரணர்
    148. வால்மீகியார்
    149. விரிச்சியூர் நன்னாகனார்
    150. வீரை வெளியனார்
    151. வெண்ணிக் குயத்தியார்
    152. வெள்ளெருக்கிலையார்
    153. வெள்ளைக்குடி நாகனார்
    154. வெள்ளை மாளார்
    155. வெறியாடிய காமக் கண்ணியார்
    156. வேம்பற்றூர்க் குமரனார்.

    ஓம். வெ.சுப்பிரமணியன் ஓம்





    அன்புடன் நண்பர்களுக்கு வணக்கம்

    சங்க காலப் பெண்பாற் புலவர் பெருமக்கள் முப்பத்தி மூன்று பேர்

    0 மறுமொழிகள்
    ஓம்
    சங்ககாலப் பெண் புலவர்கள்.
    அள்ளூர் நன்முல்லையார்
    ஆதி மந்தியார்
    ஒக்கூர் மாசாத்தியார்
    ஓரம் போகியார்
    ஔவையார்
    கச்சிப்பேட்டு நாகையார்
    கழார்க்கீரன் எயிற்றியார்
    காக்கைப் பாடினியார் நச்சோள்ளையார்
    காவற்பெண்டு
    காமக்கணி பசலையார்
    குறமகள் இளவெயினியார்
    குறமகள் குறிஎயினியார்.
    குமிழி ஞாழலார் நப்பசலையார்
    நக்கண்ணையார்
    நன்னாகையார்
    நெடும்பல்லியத்தை
    பக்குடுக்கை நன்கணியார்
    பூங்கண் உத்திரையார்
    பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு
    பெரெயில் முறுவலார்
    பேயார்
    பேய்மகள் இளவெயினியார்
    பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
    பொன்முடியார்
    மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
    மாரிப்பித்தியார்
    மாறலோகத்து நப்பசலையார்
    முள்ளியூர்ப் பூதியார்
    வருமுலையாரித்தி
    வெறியாடிய காமக் கண்ணியார்
    வெள்ளி வீதியார்
    வெண்ணிக் குயத்தியார்
    வெண்மணிப் பூதியார்


    சங்க காலப் பெண்பாற் புலவர் பெருமக்கள் முப்பத்தி மூன்று பேர்
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
    நன்றி”தமிழ் அறிஞர்களும் தமிழ் இலக்கியமும்”(மு.அப்பாஸ்மந்திரி)
    ஓம் வெ.சுப்பிரமணியன் ஓம்.

    விதியில் விளையாட்டு..

    0 மறுமொழிகள்
    8, 2008
    விதியில் விளையாட்டு- விளையாட்டில் விதி.



    .

    ஓம்.

    விம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷ் (Arther ashe) . அவருடைய உடலில் இரத்தம் செலுத்தப்பட்ட போது மருத்துவ மனையின் கவனக் குறைவால் அவருக்கு எய்ட்ஸ் வந்து தொற்றியது.

    மரணத்தின் வாயிலில் இருந்த அவர் பூரண குணமடைய வேண்டி உலகின் பல பகுதிகளிலிருந்து அவருடைய இரசிகர்கள் கடித எழுதினார்கள்.

    அவர்களில் ஒருவர், 'கடவுள் என் இந்தக் கொடிய நோய்க்கு உங்களைத் தேர்ந்தெடுத்தார்?' என்று கேட்டிருந்தார்.

    அதற்கு ஆர்தர் ஆஷ், " நண்பரே, உலகில் ஐந்து கோடி குழந்தைகள் டென்னீஸ் விளையாடக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுள் 50 இலட்சம் பேர் தொடர்ந்து அந்த விளையாட்டை ஆடு கின்றனர். அவர்களுள் ஐந்து இலட்சம் பேர் டென்னீஸ் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். ஐம்பது ஆயிரம் பேர் தேசிய அளவில் விளையாடுகின்றனர். அவர்களுள் 5 ஆயிரம் பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகின்றனர். 50 பேர் விம்பிள்ஸ்டன்னில் விளையாடுகின்றனர். அவர்களுள் 4 பேர் அரை இறுதிக்குத் தகுதி பெறுகின்றனர். 2 பேர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுகின்றனர்.

    "நான் பரிசுக் கோப்பையைக் கையிலேந்தி நின்றபோது இறைவனிடம், 'இறைவா! என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாய்" என்று கேட்கவில்லை.

    இப்போது துன்பத்தில் துடித்து துயருரும் போதும், 'என் என்னைத் தேர்ந்தெடுத்தாய்?' என்று இறைவனிடம் முறையிடுவது நியாயமில்லை. என்றே நினைக்கிறேன்." என்றார்.

    இறைவா, என்னை

    இன்பத்தில் சிரிக்க வைத்தாய்;

    துன்பத்தில் அழ வைத்தாஉ;

    வெற்றியில்

    மனிதனாக்கினாய்;

    தோல்வியில்

    என்னைச் செப்பனிட்டாய்;

    னியே என்னை வாழவைத்தாய்;

    நீயே எனக்கு ஓய்வும்

    அளித்தாய்.



    ஓம்
    வெ.சுப்பிரமணியன் ஓம்

    வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

    0 மறுமொழிகள்
    Thiruvanmiyu pathikam(vannasarabam Thandapani suvamigal)

    ஒம்.

    வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய

    திருவான்மியூர் சிவபெருமான் பதிகம்.

    0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0



    வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839- 1898)



    நெல்லை மாவட்டத்தில் விகாரி ஆண்டு கார்த்திகை மாதம் ஆறாம் நாளன்று (28-11- 1839) செந்தில் நாயகம் பிள்ளை, பேச்சிமுத்து அம்மையார் ஆகியோருக்கு சங்கரலிங்கம் என்ற மகன் அவதரித்தான். ஆறாவது வயதில் தந்தையை இழந்த சங்கரலிங்கம் தென்காசியருகேயுள்ள சுரண்டை என்ற ஊரில் தனது தந்தையின் நண்பரான சீதாராம நாயக்கர் மூலம் இறைவழிபாடு ஆகியவற்றை அறிந்தார். சிறு வயதில் சந்தப்பாடல்கள் பாடும் வல்லமையைப் பெற்றார். செங்கோட்டையருகே உள்ள திருமலைஎன்ற தலத்தில் முருகனின் தரிசனத்தை நாடினார். ஒரு நாள் முழுவதும் காத்திருந்த பின் தரிசனம் கிடைக்காததால் மலைமீதிருந்து உருண்டு விழுந்தார். ஆயினும் சொற்ப காயங்களுடன் தப்பினார். பின்னர் செங்கோட்டை யில் இருந்தபோது முருகன் தரிசனம் அளித்தார்.



    சுவாமிகள் தனது வாழ்வில் மூன்று முறை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது. (அவரது மகன் செந்தில்நாயகமும் ஆன்மீக, இலக்கியத் துறையில் சேவை புரிந்தார். செந்தில் நாயகத்தின் மகனான முருகதாச சுவாமிகள் கௌமார மடத்தின் தலைவராகப் பணியாற்றியதுடன் பல நூல்களையும் வெளியிட்டார்.) இறுதியில் சுவாமிகள் துறவறம் பூண்டு காவி உடை, தண்டம், கௌபீனம், நெற்றியில் திரு நீறு, தோளில் திருமண் சின்னம் ஆகியவற்றை ஏற்றார். 1861-ஆம் ஆண்டில் திரு நெல்வேலியை விட்டுக்கிளம்பித் தல யாத்திரை புரிந்தார். மறு ஆண்டு சென்னை கந்தகோட்டத்தில் பல அறிஞர்கள் முன்பு முருகன் பிள்ளைத் தமிழ் என்ற நூலை அரங்கேற்றினார். திருவண்ணாமலையில் முருகன் சந்நிதி வாயிலைச் செப்பனிட்டு அச்சந்நிதியில் வழிபாடுகள் நடைபெற உதவினார். இறுதிகாலத்தில் விழுப்புரத் தையடுத்துள்ள திருவாமத்தூரில் மடம் அமைத்து ஆன்மீக சேவையும் சமூகத் தொண்டும் செய்துவந்தார். ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடுத்தார். பல அற்புதச் செயல்களை நடத்தினார்.

    வண்ணம் என்ற ஒருவகை சந்தத்தைப் பாடுவதில் வல்லவராக விளங்கியதால் 'வண்ணச்சரபம்' என்ற பெயரும், திருப்புகழ் அடிகள் என்ற பெயரும், சந்தப் பாடவலப் பெருமான், முருக தாச அடிகள் ஆகிய பெயர்களும் சுவாமிகளுக்கு வழங்கப்பட்டன. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தல், சிறு தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய மிருக பலியைத் தடுத்தல், சாதிக் கொடுமையை எதிர்த்தல், கைம்மைப் பெண்களின் திருமணத்தை ஆதரித்தல், தமிழில் அருச்சனையை ஊக் குவித்தல் ஆகிய கொள்கைகளைச் சுவாமிகள் தனது பாடல்கள் மூலம் வெளிப் படுத்தினார்.



    சுவாமிகள் தமிழ் இலக்கணம், ஆன்மீகம் ஆகிய துறைகளில் கணக்கற்ற நூல்களை இயற்றியுள்ளார். சந்த வகைக்கு இலக்கணம் வகுக்கும் எண்ணத்துடன் 'வண்ணத்தியல்பு' என்ற நூலை இயற்றினார். வருக்கக் குறள், மனு நெறித் திரு நூல், அருளாட்சி,அரசாட்சி நூல் போன்ற பொது நூல்களை இயற்றினார். திருவ ரங்கம், தில்லை, பழனி ஆகிய தலங்கள் மீது ஆயிரம் ஆயிரம் பாடல்களை எழுதினார். திருவல்லிக்கேணி மீது திருவெழு கூற்றிருக்கை இயற்றினார். புதுவை வேத புரீசர் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் மீது ஐந்து நூல்களையும், திருவா மத்தூர் தல புராணத்தையும், 72 புலவர்களின் வரலாற்றை விவரிக்கும் புலவர் புராணத்தையும் இயற்றினார்.

    கௌமார சமயத்தைப் பற்றி 14 நூல்களும் எழுதினார். சூரியன், சிவன், அம்மன், திருமால், கணபதி, முருகன், பொதுக்கடவுள் ஆகியஏழு தெய்வங்கள் மீது வாரத்தில் ஒவ்வொரு நாள் ஒரு பதிகம் என்ற கணக்கில் ஏழாயிரப் பிரபந்தம்'' என்ற நுலை இயற்றினார். இவர் இயற்றிய தனிப் பாடல்களும் திரட்டாக வெளியிடப்பட்டுள்ளன.



    அருணகிரிநாதரே மறு பிறப்பில் தண்டபாணி சுவாமிகளாக அவதரித்துள்ளதாக ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணகிரி நாதர் புராணம் குருபரத்துவம் (தனது சுய சரிதம்) ஆகிய நூல்களில் சுவாமிகளே இக்கருத்தைத் தெரிவித் துள்ளார். தனது தலயாத்திரையின் போது தண்டபாணி சுவாமிகள் திருவான்மியூர் வந்து இங்குள்ள மருந்தீசர் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பதிகம் 'சித்தாந்தம்' என்ற மாத இதழில் ( ஏப்ரல் 1966) வெளியிடப்பட்டுள்ளது.

    திருவான்மியூர்ச் சிவபெருமான் பதிகம்

    ` (*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)

    திருவான்மியூர்ச் சிவனே சீதரனும் போற்றும்

    ஒருவா! புலித்தோல் உடையாய் - மருவார்

    கடுகை யணிவானே! நின் கண்ணருளால் என்றன்

    இடுக்க ணெல்லாம் தீர்த்தருளின்றே.



    அங்கமுற்றும் வெண்ணீ(று) அணியும் உன(து) அடியார்பால்

    வெங்கலிநோய் மருவிலுன்றன் வியன்புகழ்கோர் இழிவன்றோ

    பங்கமில் சீர் தென்னகைப் பதியுடையான் உயிர்போல்வாய்

    செங்கண் விடைப்பரி யூர்வாய்! திருவான்மியூர்ச் சிவனே.--(1)



    மௌலந் தோட்புரவலர்தம் வாழ்வினையும் மதியார்தாம்

    எவ்வ முறக்காணிலும் சற்(று)மிரங்காதல் முறைதானோ?

    பௌவவிடம் உண்டோனே! பரமாய பண்ணவனே!

    செவ்வரிக் கண் உமைபங்கா! திருவான்மியூர்ச் சிவனே.---(2)



    இருக்கு முதலாய மறை ஈரிரண்டும் ஏத்தரிதாப்

    பெருக்கும் உன்றன் புகழ்சிறிது பேசும்நலம் பெறுவோனே?

    மருக்கமழ் பூங்கொன்றை யணிவார் சடையில் மதிவைத்தாய்!

    திருக் கொழியத் தடுத்தள்வாய்! திருவான்மியூர்ச் சிவனே.--(3)



    நாவேறுமவள் கேள்வன் நடுத்தலையில் பலிகொள்வாய்

    பாவேறப் புனைவார்க்குப் பரிசளித்த விதம் யாதோ?

    தாவேறும் வல்லவுணர் தமக்கும் அருள்வானே!

    சேவேறும் பெருமானே! திருவன்மியூர்ச் சிவனே.--(4)



    புத்தர் முதற்பகர்கின்ற புலைச் சமயத்தினர் முன்னென்

    சித்தமொல்கித் தளராமற் திருவருள் வாழ்வடையோனே?

    மத்தமெருக் காத்தி தும்பை வன்னிமுதற் சென்னியிற்கொள்

    சித்தனே! ஈடில்புகழ்த் திருவான்மியூர்ச் சிவனே.---(5)



    புணராமுலை மின்னார் பொய்ப்போக மயல்கொண்டு

    நாணாமற் றிருவேற்கு நலம்சிறி(து) ஈந்தருள்வாயோ?

    ஆணாதி ஒருமூன்று ஆகியன்றும் ஆகானே!

    சேணாடர் பணிகொள்ளும் திருவான்மியூர்ச் சிவனே..(6)



    கரியவனும் காணாநின் கழல்பாடிக் கசிந்துருகா(து)

    உரியவினைப் போகத்தூ(டு) உழல்வேனும் உய்வேனோ?

    கிரியினை வில்லெனக் கொண்டு கிளர் ஒளிப்புன்னகை தன்னால்

    திரிபுரம் நீரெனச் செய்தாய்! திருவன்மியூர்ச் சிவனே!.--(7)



    மிகப்புகழ்ப் பார்த்தன் வில்லடிக்கு விறல்வாளி

    அக்கணத்தன்(று) அருள்செய்தாய்! அடியேனுக் கிரங்காயோ?

    முக்கணுடைப் பெம்மானே! முவருக்கும் முதலானாய்!

    திக்கடங்க உணர்சீலத் திருவான்மியூர்ச் சிவனே!.--(8)



    அத்திமுகத்தினன் செவ்வேள் ஆகும் இருவரைப் பெற்றாய்!

    நந்தியுனைப் போற்றிசைக்கும் நாயடியற்(கு) இரங்காயோ?

    பத்திவலைப் படல் கூறிப் பணிந்தானுக்(கு) அருள் செய்தாய்!

    சித்தியடு முத்தி நல்கும் திருவன்மியூர்ச் சிவ·னே.=.--(9)



    நால்வருக்களுக்கு அருள்செய்த நலம் கேட்டு நண்ணியுன்றன்

    பால்வரும் என்றனக்கான பரிசின்னெ தரவேண்டும்!

    கோல்வனப்புக் கண்ணளைக்குல விடைமேற் கூடவைத்தாய்

    சேல்வள நீர்வயல் காட்டும் திருவான்மியூர்ச் சிவனே..--(10)



    செல்வமலி தருபான்மைத் திருவாமியூர்ச் சிவன்பால்

    நல்வரம் பெற்றுய்வ தெண்ணி நறுந்தமிழ்த் தென்மலய மெனும்

    கல்வரைப்பால் அவிர்கின்ற கழைவனத்தோன் கழறுமிலை

    சொல்வதெனிற் துணிவுற்றோர் துயர்சிறிதும் தோயாரே!..(11)

    ஓம். வெ.சுப்பிரமணியன் ஓம்

    அன்புடன் வெ.சுப்பிரமணியன், ஓம்.

    சிலேடைச் செல்வம்

    0 மறுமொழிகள்
    சிலேடைச் செல்வம் -1
    திருப்பூர் கிருஷ்ணன்
    =================
    தண்ணீருக்குக் கவலையில்லை

    சேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு உயர்நிலைப் பள்ளியாக
    இருந்தது அது. ஊருக்கு வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே
    அந்தப் பள்ளிக் கட்டிடம்.

    கி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது நிர்வாகத்தார்
    விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார். பள்ளியைச் சுற்றிக்
    காட்டினார்கள். கிணற்றையும் காட்டினார்கள்.

    ''கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து வந்தோம். ஆனால்
    இப்போது பம்ப் செட் போட்டுவிட்டோம். பம்ப் மூலமாகத் தண்ணீர்
    கொட்டுகிறது'' என்று கூறினார்கள்.

    இதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா! அப்படியானால் இனிமேல்
    தண்ணீருக்குக்
    கவலையே இல்லை என்று சொல்லுங்கள்'' என்றார்!
    -----------------------------------------------------------------------------
    சிலேடைச் செல்வம்-2
    குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப்
    பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார்
    கி.வா.ஜ.

    ''உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக்
    குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப்
    பெண்மணி.

    கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு
    பார்த்தார். பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான்
    செய்யும்'' என்றார். ஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது'
    என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!
    ======================================================
    சிலேடைச் செல்வம் -3
    கிருஷ்

    தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன்
    மாணவராக
    இருந்த நேரம். ஒருமுறை கி.வா.ஜ.வை ஒரு பாட்டுப் பாடு என்றார்
    உ.வே.சா. அப்போது கி.வா.ஜ.வுக்குத் தொண்டை கட்டியிருந்தது.
    கி.வா.ஜ. செய்த தமிழ்த் தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது
    தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை. 'என் தொண்டை கம்மலாக
    இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று
    தயங்கினார் கி.வா.ஜ. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே
    கேட்கப் போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு' என்றார்
    உ.வே.சா!
    ===========
    இம் மைக்கும் மறு மைக்கும்.....
    கிருஷ்
    ========
    இலக்கியமும் ஆன்மிகமும் கலந்த கூட்டம் ஒன்றிற்கு கி.வா.ஜகந்நாதனை
    அழைத்திருந்தார்கள். பேசத் தொடங்கினார் கி.வா.ஜ. வாழ்க்கையின்
    நிலையாமை குறித்து இலக்கிய மேற்கோள்கள் பலவற்றை எடுத்துக் காட்டி
    விளக்கலானார். இம்மைக்கும் மறுமைக்கும் என்ற இரண்டிலும் உயர்ந்த நிலைகளை
    அடைய ஆன்மிகம் உதவும் என்று விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர்
    பேசிக் கொண்டிருந்த ஒலிபெருக்கி (மைக்) தகராறு செய்தது.
    ஒலிபெருக்கி
    உரிமையாளர் அந்த மைக்கை நீக்கிவிட்டு வேறு ஒரு மைக்கைக் கொண்டு
    வந்து
    பொருத்தினார். என்ன சிக்கல் என்றால் கொண்டு வந்து வைத்த இரண்டாவது
    ஒலிப்பெருக்கியும் சரியாக வேலை செய்யவில்லை. சுவாரஸ்யமாக
    சொற்பொழிவு கேட்டுக் கொண்டிருந்த இலக்கிய அன்பர்கள்
    சலிப்படைந்தார்கள்.
    அந்த நேரத்தில் கி.வா.ஜ. 'இம்மை, மறுமை இரண்டிலும் பயன்படுவது
    ஆன்மிகம்
    என்று சொன்னேன். ஆனால் இன்று இம் மைக்கும் பயன்படவில்லை, மறு மைக்கும்
    பயன்படவில்லை. என்ன செய்வது!' என்று சொல்லி அவையில் கலகலப்பைத்
    தோற்றுவித்தார்.

    -=-=-=-=-=-=--=-=-=-=-~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~````
    வெ.சுப்பிரமணியன் ஓம்

    தமிழ் இணைய மாநாடு 2009

    0 மறுமொழிகள்


    அமைதியைத் தேடியும்.....

    0 மறுமொழிகள்

    Prasdent's Tamiz kavithai on 8-6-04

    100 கோடி இந்தியர்களுக்காக கலாம் பாடிய தமிழ் கவிதை

    புதுதில்லி, ஜூன் 8: நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் திங்கள்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனது உரையின் துவக்கத்தில், 100 கோடி இந்திய மக்களுக்காக இறைவனிடம் தமிழ் கவிதை வடிவில் வேண்டினார்.

    ஞாயிற்றுக்கிழமை காலை நடைப் பயிற்சியின்போது அவரது மனதில் உருவான கவிதை இதுதான்:

    நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்.
    எங்கு இருக்கிறது
    என் லட்சிய சிகரம் இறைவா?
    நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன்.
    எங்கு இருக்கிறது
    அறிவுப் புதையல் என் இறைவா?


    நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்.
    எங்கு இருக்கிறது
    அமைதித் தீவு இறைவா?
    இறைவா, 100 கோடி மக்கள்
    லட்சிய சிகரத்தையும்
    அறிவுப் புதையலையும்


    இன்ப அமைதியையும்
    உழைத்து அடைய அருள்வாயாக!
    ஸ்ரீ அப்துல்கலாம் குடியரச்


    0 மறுமொழிகள்
    ஓம்.
    மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது உண்மையா?
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
    மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமா என்பது ஒரு விசித்திரமான கேள்வி என்று முதல் பார்வையில் நமக்குத் தோன்றலாம்.
    மன்னிக்கும் போது நம் கோபமும் ரோசமும் மனத்துக்குள் அடக்கி வைப்பதனால் நம்ம்டைய இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதல்லவா நிஜ விளைவு என்று நாம் இயல்பாக எண்ணுவதும் கருத்தில் கொள்ளவேண்டியதே.

    நமக்குள்ளிருக்கும் உணர்ச்சிகளை வெளியேற்றிவிடுவோமானால், விறைப்பிலிருந்து விடுபட்டு உடலுக்கும் மனததுக்கும் நிம்மதி பிறக்கும் என்று நாம் அறிந்ததுண்டு. ஆனால், மன்னிக்கிறவன் உணர்ச்சிகளை மனதுக்குள்ளேயே ஒடுக்கி வைத்திருந்தும் நீடித்த ஆயுளைப் பெறுவான் என்பதிலும் சாஸ்த்திர அடிப்படை இருப்பதாக நாம் உணர்வதில்லை.பாபம் மனிதத் தன்மைக்கு உரியதும், மன்னிப்பு தெய்வத்தன்மைக்கு உரியதும் என்பது மத போதனைகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனாலும் மன்னிப்பும் நீடித்த ஆயுளும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டவர் அமெரிக்காவின் மிசிகன் பல்கலைக் கழக விஞ்ஞானி டாக்டர் லாரன் எல்.டாசன்ட் என்பவரே,
    ஒருவருக்கு மன்னிப்பு அளித்ததும் அவரிடம் கருணை காட்டியதாக உணரும் நற்சிந்தனை மன்னிப்பவரின் உள்ளத்தில் உருவாகின்றதால் அவர் மகிழ்வுறுகின்றார். ஆனால், தண்டனை அளிக்கும் போது குற்ற உணர்ச்சி அவரைத் துரத்திவருவதும் மன நிம்மதியை அழிப்பதுமே விளைவுகள்.

    மகிழ்வுற்ற மனதுடையவனுக்கு நீடித்த ஆயுள் உண்டாகும் என்பதையே அந்த விஞ்ஞானி தன் கண்டுபிடிப்புகளின் சாரமாக வெளியிட்டுளார்.
    நன்றி ’ஓலைச்சுவடி’ டாக்டர் வெங்கானூர் பாலகிருஷ்ணன்.
    ஓம்.சுப்பிரமணியன் ஓம்.

     

    Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES