ஓம்.
மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது உண்மையா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமா என்பது ஒரு விசித்திரமான கேள்வி என்று முதல் பார்வையில் நமக்குத் தோன்றலாம்.
மன்னிக்கும் போது நம் கோபமும் ரோசமும் மனத்துக்குள் அடக்கி வைப்பதனால் நம்ம்டைய இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதல்லவா நிஜ விளைவு என்று நாம் இயல்பாக எண்ணுவதும் கருத்தில் கொள்ளவேண்டியதே.
நமக்குள்ளிருக்கும் உணர்ச்சிகளை வெளியேற்றிவிடுவோமானால், விறைப்பிலிருந்து விடுபட்டு உடலுக்கும் மனததுக்கும் நிம்மதி பிறக்கும் என்று நாம் அறிந்ததுண்டு. ஆனால், மன்னிக்கிறவன் உணர்ச்சிகளை மனதுக்குள்ளேயே ஒடுக்கி வைத்திருந்தும் நீடித்த ஆயுளைப் பெறுவான் என்பதிலும் சாஸ்த்திர அடிப்படை இருப்பதாக நாம் உணர்வதில்லை.பாபம் மனிதத் தன்மைக்கு உரியதும், மன்னிப்பு தெய்வத்தன்மைக்கு உரியதும் என்பது மத போதனைகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனாலும் மன்னிப்பும் நீடித்த ஆயுளும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டவர் அமெரிக்காவின் மிசிகன் பல்கலைக் கழக விஞ்ஞானி டாக்டர் லாரன் எல்.டாசன்ட் என்பவரே,
ஒருவருக்கு மன்னிப்பு அளித்ததும் அவரிடம் கருணை காட்டியதாக உணரும் நற்சிந்தனை மன்னிப்பவரின் உள்ளத்தில் உருவாகின்றதால் அவர் மகிழ்வுறுகின்றார். ஆனால், தண்டனை அளிக்கும் போது குற்ற உணர்ச்சி அவரைத் துரத்திவருவதும் மன நிம்மதியை அழிப்பதுமே விளைவுகள்.
மகிழ்வுற்ற மனதுடையவனுக்கு நீடித்த ஆயுள் உண்டாகும் என்பதையே அந்த விஞ்ஞானி தன் கண்டுபிடிப்புகளின் சாரமாக வெளியிட்டுளார்.
நன்றி ’ஓலைச்சுவடி’ டாக்டர் வெங்கானூர் பாலகிருஷ்ணன்.
ஓம்.சுப்பிரமணியன் ஓம்.
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to " "
Post a Comment