விதியில் விளையாட்டு..

0 மறுமொழிகள்

8, 2008
விதியில் விளையாட்டு- விளையாட்டில் விதி.



.

ஓம்.

விம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷ் (Arther ashe) . அவருடைய உடலில் இரத்தம் செலுத்தப்பட்ட போது மருத்துவ மனையின் கவனக் குறைவால் அவருக்கு எய்ட்ஸ் வந்து தொற்றியது.

மரணத்தின் வாயிலில் இருந்த அவர் பூரண குணமடைய வேண்டி உலகின் பல பகுதிகளிலிருந்து அவருடைய இரசிகர்கள் கடித எழுதினார்கள்.

அவர்களில் ஒருவர், 'கடவுள் என் இந்தக் கொடிய நோய்க்கு உங்களைத் தேர்ந்தெடுத்தார்?' என்று கேட்டிருந்தார்.

அதற்கு ஆர்தர் ஆஷ், " நண்பரே, உலகில் ஐந்து கோடி குழந்தைகள் டென்னீஸ் விளையாடக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுள் 50 இலட்சம் பேர் தொடர்ந்து அந்த விளையாட்டை ஆடு கின்றனர். அவர்களுள் ஐந்து இலட்சம் பேர் டென்னீஸ் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். ஐம்பது ஆயிரம் பேர் தேசிய அளவில் விளையாடுகின்றனர். அவர்களுள் 5 ஆயிரம் பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகின்றனர். 50 பேர் விம்பிள்ஸ்டன்னில் விளையாடுகின்றனர். அவர்களுள் 4 பேர் அரை இறுதிக்குத் தகுதி பெறுகின்றனர். 2 பேர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுகின்றனர்.

"நான் பரிசுக் கோப்பையைக் கையிலேந்தி நின்றபோது இறைவனிடம், 'இறைவா! என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாய்" என்று கேட்கவில்லை.

இப்போது துன்பத்தில் துடித்து துயருரும் போதும், 'என் என்னைத் தேர்ந்தெடுத்தாய்?' என்று இறைவனிடம் முறையிடுவது நியாயமில்லை. என்றே நினைக்கிறேன்." என்றார்.

இறைவா, என்னை

இன்பத்தில் சிரிக்க வைத்தாய்;

துன்பத்தில் அழ வைத்தாஉ;

வெற்றியில்

மனிதனாக்கினாய்;

தோல்வியில்

என்னைச் செப்பனிட்டாய்;

னியே என்னை வாழவைத்தாய்;

நீயே எனக்கு ஓய்வும்

அளித்தாய்.



ஓம்
வெ.சுப்பிரமணியன் ஓம்

மறுமொழிகள்

0 comments to "விதியில் விளையாட்டு.."

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES