Prasdent's Tamiz kavithai on 8-6-04
100 கோடி இந்தியர்களுக்காக கலாம் பாடிய தமிழ் கவிதை
புதுதில்லி, ஜூன் 8: நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் திங்கள்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனது உரையின் துவக்கத்தில், 100 கோடி இந்திய மக்களுக்காக இறைவனிடம் தமிழ் கவிதை வடிவில் வேண்டினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நடைப் பயிற்சியின்போது அவரது மனதில் உருவான கவிதை இதுதான்:
நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கு இருக்கிறது
என் லட்சிய சிகரம் இறைவா?
நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன்.
எங்கு இருக்கிறது
அறிவுப் புதையல் என் இறைவா?
நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்.
எங்கு இருக்கிறது
அமைதித் தீவு இறைவா?
இறைவா, 100 கோடி மக்கள்
லட்சிய சிகரத்தையும்
அறிவுப் புதையலையும்
இன்ப அமைதியையும்
உழைத்து அடைய அருள்வாயாக!
ஸ்ரீ அப்துல்கலாம் குடியரச்
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "அமைதியைத் தேடியும்....."
Post a Comment