ஸ்ரீ மஹா பாரத பர்வங்கள்

1 மறுமொழிகள்

ஸ்ரீ மஹா பாரத பர்வங்கள் என்ற தலைப்பில் கும்பகோணம் கல்லூரி சமஸ்கிருத பண்டிதர் தி.ஈ. ஸ்ரீநிவாசாச்சாரியாரல் மொழிபெயர்க்கப்பட்டு அதே கல்லூரி தமிழ் பண்டிதர் ம.வீ. இராமானுஜாசாரியாரால் தொகுக்கப்பட்டு 1908 லிருந்து வெளிவரத்தொடங்கிய மகா பாரத தமிழ் மொழிபெயர்ப்பு முழுதும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவர 1932 வரையிலான காலம் தேவைப்பட்டது. அது வெளிவந்த காலத்திலே சுதேசமித்திரன் ஹிந்து போன்ற பத்திரிகைகளால் பெரிது பாராட்டப்பட்டது. உ.வே.சாமிநாதய்யர் கூட, இக்காரியத்தை தானே செய்யும் எண்ணத்திலிருந்ததாகவும், ஆனால் ம.வீ. இராமானுஜாச்சாரியரின் வெளியீடுகளைப்பார்த்த பிறகு தான் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாகவும் பாராட்டியிருக்கிறார்.

அதன் பிறகு இந்த மஹாபாரத மொழிபெயர்ப்பு மறு பதிப்பு வெளிவந்ததில்லை. 80 ஆண்டுகளுக்கு மேலான இந்த இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸின் எஸ். வெங்கட் ரமணன் 2002 லிருந்து ஸ்ரீமஹாபாரத பர்வங்கள் என்ற அதே தலைப்பில் பாகம் பாகமாக மறு பதிப்பு கொண்டு வந்துள்ளார். அனுசாசன பர்வத்திலிருந்து ஸ்வர்காரோஹண பர்வம் முடிய உள்ள 9-வது பாகம் இப்போது வெளிவந்துள்ளது. இதோடு 1902-1932 காலத்தில் வெளிவந்த ஸ்ரீ ம்.வீ ராமானுஜாச்சாரியாரின் மகா பாரத மொழிபெயர்ப்பின் மறு பதிப்பு முற்றுப்பெற்றுள்ளது. ஒவ்வொரு பாகமும் சுமார் 800 பக்கங்களிலிருந்து 1100 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு பாகத்தின் விலை ரூ. 450/-

அவ்வப்போது இந்த மறுபதிப்பு பாகம் பாகமாக வெளிவந்து கொண்டிருந்த போது என் நண்பர்களுக்கு நான் இதை அறிவித்து வந்திருக்கிறேன். 9-வது பாகம் கடைசியாக இப்போது வெளிவந்ததும் இக்காரியம் இது பற்றிய செய்தி, இப்படித்தான் தெரிந்தவர்கள் அடுத்தவர்களுக்குச் சொல்லி பரப்பட்டு வருகிறது. பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் சக்தி இல்லாத காரணத்தால். இப்பதிப்பு தவிர ஸ்ரீ மகாபாரதத்தை முழுமையாக தமிழ் மொழிபெயர்ப்பில் தரும் பிரசுரம் வேறு இப்போது இல்லை.

வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

S.Venkatramanan,
Shri Chakra Publications,
Door No. 14, Valmiki Street,
Plot No. 78, Selvaraj Nagar Ext-2
Urappaakkam (West)
PIN 603 211 Ph no.044 - 27466110 Shri Mahabharata Parvangal. 9 volumes. Rs 450 (each vol)

இது என்னால் ஆன அணில் சேவை. அவ்வளவே.

வெங்கட் சாமிநாதன்.

மறுமொழிகள்

1 comments to "ஸ்ரீ மஹா பாரத பர்வங்கள்"

supersubra said...
June 17, 2008 at 11:02 PM

I think I have read the whole book (in 4 volumes) when I was 10 years old from public library in Madurai in 1967. Thanks for bringing this information. Now I can get hold of the sacred text once again.

Lot of heartfull thanks to you for bringing this information.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES