தென் காஞ்சி கோட்டம் என அழைக்கப்படும். 'திககெல்லாம் புகழும் திருநெல்வேலி' எனும் திருத்தலத்தினை மையமாகக் கொண்ட தென் பாண்டிச்சீமை இது. இம்மாவட்டத்தின் மக்களுக்கு பல பெருமை உண்டு. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை.தமிழே ஓடுகிறது என்பர். தஞ்சை மாவட்டத்தாருக்கு இசை எப்படி உயிரோ, அதுபோல நெல்லைச் சீமைக்காரர்களக்கு இலக்கியம் ரசிகமணி டி.கே.சி.யின் 'கம்பர் தரும் காட்சி' அப்படியே மனக்கண்முன் வருகிறது.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 'மனோன்மணீயம்' என்ற ஒப்பற்ற நாடக நூலை ஆக்கினார்.அதில் சீவகபாண்டியன், மதுரையின் நீங்கி திருநெல்வேலியை தலை நகராக்கிச் சில காலம் அரசாண்டு வந்ததாகக் கூறியுள்ளார்கள்.
நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டபோது,நெல்லை மாவட்டத்தினர் பலர் திசைக் காவலர்களாக அமர்த்தப்பட்டனர். ஆயுதம் தாங்கிய படையை உடையவர்களானதால் 'பளையக்கார்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். வடகரை, ஆவுடையாள்புரம், ஊத்துமலை, சிவகிரி, சிங்கம்பட்டி, அளகாபுரி, ஊர்க்காடு, சுரண்டை, கடம்பூர், இளவரசனேந்தல்,மணியாச்சி,பாஞ்சாலங்குறிச்சி முதலியன அத்தகைய பாளையப்Àட்டுகள் ஆகும்.
அப்படி வந்ததே பாளையங்கோட்டையும்.நெல்லை மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை வட மேற்கு எல்லையில் துவங்கி,நேர்தெற்காக தென்காசிக்கருகே ஒரு சிறு வளைவாகித் தண்பொருளைப் பள்ளத்தாக்குடன் கூடிய பாவநாசம் வரை செல்கிறது. பின் தென்கிழக்காகத் திரும்புகிறது. மிகத் தொலைவிலுள்ள எந்த சமவெளியிலிருந்து பார்த்தாலும் இந்த மலைத் தொடரில பல முடிகளைக் காணலாம்.
சுமார் ஐயாயிரம் அடி உயரமுள்ள,இருபதுமுடிகள் இந்த எல்லையில் உள்ள சிவகிரியில் துவங்கி,கள்ளக்கடை, மொட்டை, கோட்டைமலை, குளிராட்டி, குற்றாலத்திற்கு அருகில் உள்ள பஞ்சம்தாங்கி, அம்பாசமுத்திர எல்லையில் மத்தானம், பாறை பாவநாசம் அருகில் அகத்தியர் மலை, அதற்குத் தெற்கில் ஐந்து தலைகள் கொண்ட, ஐந்தலைப்பொதிகை, திருக்குறுங் குடியையொட்டி மகேந்திரகிரி, பணகுடி கணவாய்க்குத் தென்கிழக்கே 'ஆரல்-ஆம்- பொழி' இன்று ஆரல்வாய் மொழி என அழைக்கபப்டும் எல்லை வரை. நெல்லை மாவட்டத்தின் பேராறு தான் 'தாமிரபரணி' என அழைக்கப்படும் 'தன்பொருணை' ஆறு.
பொதிகை முழுவதும் மலையில் தோன்றி மாவட்டம் முழுவதும் வளப்படுத்துகிறது.தன்பொருணைÔடன் சேரும் ஆறுகள் எண்ணற்றவை. பாம்பாறு காரியாறு, ஐந்தும் மலையில் தோன்றி மலை மேலேயே பொருணையோடு சேருபவை.சிங்கம்பட்டிக்கு
அருகில் மணிமுத்தாறும், செங்கல் தேரிச் சோலையில் தோன்றும் வரட்டாறும் கூசன்குழி ஆறும் சிற்றாறுகளாகும்.கடையம் அருகில் கீழைச்சரிவில் தோன்றுவது, சம்புநதி, கடையத்திற்கு தெற்கே ஓடுவது ராமநதி.இவை இரண்டும் சேர்ந்து கருணை ரவண சமுத்திரம் அருகில் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து கருணை ஆற்றோடு, வராகநதி சேருவது திருப்புடை மருதூரில்.
களக்காட்டு மலையான வெள்ளிமலையில் தோன்றுவது 'பச்சையாறு', 'தருவை' என்ற இடத்தில் பேராற்றில் கலக்கிறது.
சீவலப்பேரில் வந்து கூடுவது சிற்றாறு. இது குற்றால மலையாகிய திரிகூட மலையில் தோன்றி குற்றாலம், தென்காசி, கங்கை கொண்டான் வழியே அறுபது கி.மீ. ஓடிப் பாய்கிறது. பண்புளி மலையில் தோன்றும் அநுமநதியும், சொக்கம்பட்டி மலையில் தோன்றும் கருப்பாறும் வீரகேரளம்தூர் அருகில் சிற்றாறில் சேர்கின்றன.
மத்தளம் பாறையிலிருந்து வரும்அமுதக்கண்ணியாறும்,ஐந்தருவியாறும் சிற்றாரோடு சேர்கிறது. சிந்தாமணிக்கு அருகில் தோன்றும் உப்போடை, சீவலப்பேரி அருகில் சிற்றாறில் கூடுகிறது.உப்போடை, சிற்றாறு, பேராறு மூன்றும் கூடும் இடமே முக்கூடல். தென்காசிக்கு மேற்கே ஒரு முக்கூடலும், திருப்புடைமருதூர் அருகில் ஒரு முக்கூடலும் உண்டு.. தண்பொருணையாறு அம்பாசமுத்திரம் சேரன் மகாதேவி, திருநெல்வேலி வழியாகப் பாய்ந்து கொற்கை அருகில் கடலில் சேருகிறது.
கிருஷ்ணன்,
சிஙகை
மின் தமிழ் வெளியீடு
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "பொதிகை புனித யாத்திரை"
Post a Comment